Singapenne: ஆனந்தியைக் காப்பாற்றிய உஷா… மகேஷூக்கு அந்த ரகசியம் தெரிவது எப்போது?
சிங்கப்பெண்ணே தொடரில் இன்று நடந்த எபிசோடின் கதைச்சுருக்கம் இதுதான்…
ஆனந்தியை கருணாகரன் ஃபேபரிக் லோடை எல்லாரையும் போல இறக்கச் சொல்கிறான். லிப்ட் எல்லாம் கிடையாது. படியில ஏறிப்போன்னு விரட்டுகிறான். அன்பு அவள் பின்னாடியே போகிறான். வழியில் போட்டு விடுகிறாள்.
அதை உஷா பார்த்து விடுகிறாள். ஏன் ஆனந்தி கீழே போட்டேன்னு கத்துகிறாள். அவளால தூக்க முடியாதுன்னு நான் சொன்னேன்லன்னு அன்பு சொல்கிறான். அவளுக்கு உடம்பு சரியில்லன்னு சொல்கிறான். எனக்கும் தான் சரியில்ல. நான் தூக்கலன்னு சொல்கிறாள் உஷா. அப்புறம் சௌந்தர்யா ஆனந்திக்கு ஆதரவாக பேச உஷாவுக்கும் அவளுக்கும் பேச்சு வலுக்கிறது.
ஒரு கட்டத்தில் ஆனந்தி கர்ப்பமா இருக்கிற விஷயத்தைப் போட்டு உடைக்கிறாள் சௌந்தர்யா. உஷா அதிர்ச்சி ஆகிறாள். கருணாகரனிடம் சொல்ல அவன் மகேஷிடம் சொல்லப் போவதாக மிரட்டுகிறான். அவன் உஷாவை விட்டே மகேஷிடம் சொல்லச் சொல்கிறான். ஆனால் அவளோ ஆனந்திக்கு உடல் நிலை சரியில்லை. ஏதோ மனக்குழப்பம்… அலுப்புன்னு சொல்லி சமாளிக்கிறாள்.
ஆனந்தியை ஒருவழியாகக் காப்பாற்றி விடுகிறாள். மகேஷ் ஏன் இந்த வேண்டாத வேலைன்னு கேட்க லோடு மேனுக்கு சம்பளம் தரல. அவங்க இறக்காததால எங்களுக்கு வேலை இல்லை. ஒரு நாள் வேலை இல்லன்னா கம்பெனிக்கு நஷ்டம் வரும். அதனால தான் நாங்களே இறக்குனோம்னு அன்பு விளக்குகிறான். அதற்கு மகேஷ் ஏன் இந்த வேண்டாத வேலைன்னு கருணாகரனையும் கடிந்து கொள்கிறான். அடுத்து மகேஷ் ஆபீஸ்ல மித்ராவை முறைத்துப் பார்க்கிறான்.
மகேஷூக்கு ஆனந்தியின் கர்ப்பம் பற்றிய விஷயம் எப்படியாவது தெரிந்து விட்டால் அடுத்து நடப்பது என்ன என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ஏன்னா மித்ரா செய்த சதியால் தான் ஆனந்தியே கர்ப்பம் அடைகிறாள். ரகுவின் மூலம் மயக்க மருந்து கொடுத்து அவள் மயங்கி விழுந்த பின் மகேஷ் அவளுடன் போதையில் இணைகிறான். அதனால் கர்ப்பம் உண்டாவதாக ஒரு வீடியோவில் காட்டப்பட்டது.
அது ஆனந்திக்கும் தெரியவந்தால் அவள் மகேஷை ஏற்றுக்கொள்வாளா? அப்படி ஏற்றுக்கொண்டால் அவளையே நம்பி இருக்கும் அன்புவைக் கைவிடுவாளா? அன்பு விட்டுத்தான் கொடுப்பானா? நீயே வேணாம்னு என்னை ஒதுக்கினாலும் நான் உன்னை விட மாட்டேன் என்று சொன்னவன் ஆயிற்றே அன்பு… இப்படி பல கேள்விகளுக்கு மத்தியில் ஆனந்தி பயணிக்கிறாள். அடுத்து என்ன நடக்கும் என்பதைப் போகப் போகப் பார்க்கலாம்.
