சிங்கப்பெண்ணே: ரகுவைப் பிடித்தானா அன்பு? ஆனந்தி போட்ட பிளான் சக்சஸ் ஆகுமா?
சிங்கப்பெண்ணே தொடர் நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் போய்க்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இன்று நடந்த எபிசோடின் கதைச்சுருக்கம் பார்க்கலாம்.
ஆனந்திக்கு மயக்க மருந்து கொடுத்து கர்ப்பம் உண்டாகக் காரணமானவன் ரகு. அவனைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆனந்தியும், அன்புவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ரகுவின் நண்பனை தன் வலைக்குள் வீழ்த்திய அன்பு அவனை வைத்து ரகுவைப் பிடிக்க திட்டம் போடுகிறான்.
அதன்படி ரகுவிடம் அவனது நண்பன் பேசுகிறான். அதே நேரம் ரகுவும் வர சம்மதிக்கிறான். அவனைக் கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்து விட வேண்டும் என்று நினைத்து அன்புவுக்கு போன் செய்கிறான். கம்பெனியில் அன்பு போனைப் பேசாதபடி கருணாகரன் அவனை சரமாரியாகத் திட்டுகிறான்.
அதேநேரம் மித்ரா கருணாகரனை சத்தம் போடுகிறாள். உங்களுக்கு என்னதான் பிரச்சனைன்னு கேட்கிறாள். நாம பெங்களூருக்கு அனுப்பி வச்சோமே அந்தப் பிரச்சனை இப்போ சென்னைக்கு வந்துருக்கு என்கிறான் கருணாகரன். ஆனந்தி உஷாவிடம் அந்த போனை எடுத்துத் தந்தா எங்களுக்கு உதவியா இருக்கும்னு சொல்கிறாள்.
அதாவது அன்புவின் போனுக்கு ரகுவின் நண்பன் கால் பண்ணுகிறான். ஆனால் அன்புவால் அதை எடுத்துப் பேச முடியாத சூழல். அது கப்போர்டில் இருந்து ரிங் அடித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் தான் ஆனந்தி உஷாவின் உதவியை நாடினாள். அவளும் அந்தப் போனை எடுத்துக் கொடுத்து விட அன்பு அதை வாங்கி வந்து மாடியில் வைத்துப் பேசுகிறான்.
அதே நேரம் கருணாகரன் அங்கும் வந்து அன்புவை மடக்கிப் பிடிக்கிறான். இப்படியாக எபிசோடு டுவிஸ்டுடன் போகிறது. கடைசியாக அன்பு ரகுவின் நண்பனிடம் பேசி வரவைக்கிறான். அவன் இருக்கும் இடத்தைச் சொன்னதும் அன்புவும், ஆனந்தியும் அந்த இடத்திற்கு வருகிறார்கள். அடுத்து என்ன நடந்தது என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.
