சிங்கப்பெண்ணே: துளசி போடும் திட்டம் ஜெயிக்குமா? அன்புவை ஆனந்தியிடம் இருந்து பிரிப்பாளா?
சிங்கப்பெண்ணே தொடர் சன்டிவியில் படு விறுவிறுப்பாகச் செல்கிறது. இன்றைய எபிசோடில் என்ன நடந்ததுன்னு பாருங்க.
ஆனந்திக்கு வயிற்றில் வலி வந்ததும் அவளது அக்கா கோகிலா கைப்பக்குவமாக கஷாயம் வைத்துக் கொடுக்கிறாள். சற்று வலி குணமாகிறது. அதன்பிறகு மாத்திரையும் சாப்பிடுகிறாள். அதே நேரம் மறுநாள் காலையில் டாக்டரிடம் செல்ல வேண்டும் என்றும் அன்பு தான் தன்னோடு வர வேண்டும் என்றும் அக்காவிடம் சொல்கிறாள்.
அதனால் அவளும் அன்புவிடம் போன் பண்ணி சொல்ல ஆனந்தியின் மேல் உள்ள பாசத்தையும், காதலையும் அப்படியே சொல்கிறான் அன்பு. ஆனந்தியை இப்ப கூட அவ சம்மதித்தா தாலி கட்டத் தயாரா இருக்கேன். அவளுக்குப் பிறக்கப் போற குழந்தையைத் தன்னோட குழந்தையா ஏத்துக்கிட்டு வளர்க்கத் தயாரா இருக்கேன். ஆனந்தி பரிசுத்தமானவள். அவளோட உடலை நான் காதலிக்கல. மனசைத் தான் காதலிக்கிறேன் என உருகித் தவிக்கிறான்
அதே நேரம் தான் அவளை ஆஸ்பிட்டலுக்குக் கூட்டிச் செல்லவும் தயார் என்கிறான். இதை துளசி ஒட்டுக் கேட்டு விடுகிறாள். அதை அன்புவும் கண்டுகொள்கிறான். அதே நேரம் துளசி அன்புவிடம் ஆனந்தி தான் உனக்கு சரியான ஜோடி. நீ எந்த சூழலிலும் அவளை விட்டுக் கொடுத்துடாதே மாமா.
அவ மேல இத்தனை அன்பை வச்சிருக்குறது இப்ப தான் எனக்குத் தெரிஞ்சது என்கிறாள். சரி நீயாவது புரிஞ்சிக்கிட்டீயே என்கிறான் அன்பு. மறுநாள் காலையில் அன்பு கிளம்புகிறான். அன்புவின் அம்மா இவ்வளவு சீக்கிரமா எங்கேடா போறன்னு கேட்கிறாள். அதற்கு கம்பெனிக்குத்தான் என்கிறான். இவ்வளவு சீக்கிரமாவா போறன்னு கேட்கிறாள். ஆமா. ஆனந்திக்கு செக்கப் பண்ணப் போறேன்னு சொல்கிறான் அன்பு. மாப்பிள்ளை தப்பா நினைக்காதீங்க.
ஆனந்தி ரொம்ப நல்ல பொண்ணுதான். அவ இப்ப பெரிய கஷ்டத்துல இருக்கா. சரிதான். அதுக்காக யாரு அப்பன்னே தெரியாத பிள்ளையை வயித்துல சுமக்குறவளுக்காக நீங்க இவ்ளோ தூரம் பரிவு காட்டுறது நல்லது இல்லன்னு அன்புவின் அத்தை சொல்கிறாள். ஆனந்தி தான் நான் கட்டிக்கப் போறவள். அவளுக்கு நான் செய்யாம வேற யாரு செய்வாங்கன்னு கேட்கிறான். அதுதவிர எனக்கு இப்பவே லேட்டாச்சுன்னு உடனடியாக கிளம்புகிறான் அன்பு.
ஆஸ்டலுக்கு வந்து நிற்கும் அன்புவிடம் செக்யூரிட்டி பாசமாக ஒன்றிரண்டு வார்;த்தைகளைப் பேசுகிறான். ஆனந்தி மேல இவ்ளோ நேசம் இந்த நிலையிலும் வச்சிருக்கீங்க. கண்டிப்பா கடவுள் உங்களுக்கு நல்வழி காட்டுவான்னு பாராட்டுகிறார் செக்யூரிட்டி. ஆனந்தியும் அன்புவின் பைக்கில் ஏறி உட்காருகிறாள்.
இதற்கிடையில் துளசி அன்புவின் அம்மாவிடம் அத்தை அன்புவை சாதாரணமா நாம மாத்த முடியாது. அவரு போக்குல போயிதான் மாத்த முடியும். அதைத் தான் நான் செய்யப் போறேன். நீங்க கவலைப்படாதீங்க அத்தை. அன்புவை என் வழிக்குக் கொண்டு வர்றேன்னு தீர்க்கமாக சொல்கிறாள் துளசி. அடுத்து என்ன நடக்கிறது என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.
