Categories: Cinema News latest news

அவ்ளோ புரமோஷன் பண்ணியும் இவ்ளோதான் வசூலா?.. சிங்கப்பூர் சலூன் நிலைமை இப்படி ஆகிடுச்சே?..

கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், லால், மீனாக்‌ஷி செளத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று வெளியான சிங்கப்பூர் சலூன் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்கிற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், அந்த படம் புரமோஷன் செய்த அளவுக்கு எல்லாம் பெரிதாக வசூல் செய்யவில்லை என்கிற அதிர்ச்சியான தகவல் தான் கிடைத்துள்ளது.

ஆர்ஜே பாலாஜி எல்கேஜி படத்திலேயே ஹீரோவாகி விட்டார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் அவருக்கு கடைசியாக ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நடித்த ரன் பேபி ரன் பெயரில் மட்டும் தான் ஓடியது.

இதையும் படிங்க:  வாரணம் ஆயிரம் படத்துல முதல்ல இந்த ஹீரோயின் தான் நடிச்சாங்களா!.. அய்யோ ஏன் மிஸ் ஆகிடுச்சு?..

குடியரசு தின விடுமுறையை டார்கெட் செய்து இந்த வாரம் இரண்டு படங்கள் வெளியாகின. சிங்கப்பூர் சலூன் மற்றும் ப்ளூ ஸ்டார் என இரண்டு படங்களுக்குமே செம புரமோஷன் செய்யப்பட்டது. சிங்கப்பூர் சலூன் படத்தில் லோகேஷ் கனகராஜின் கேமியோ எல்லாம் ஹைப்பை ஏற்படுத்தியது. ஆனால், வசூலில் அந்த படத்துக்கு எந்தவொரு பலனையும் கொடுக்கவில்லை என்கின்றனர்.

சிங்கப்பூர் சலூன் திரைப்படம் விமர்சன ரீதியாகவே அடிவாங்கிய நிலையில், வசூல் ரீதியாக மேலும் பலத்த சரிவு தான் என தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் நாளில் அதிகபட்சமாக 1 கோடி ரூபாய் வசூலை சிங்கப்பூர் சலூன் பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆர்ஜே பாலாஜி படத்துக்கு நல்ல ஓபனிங் தான் என்றும் கூறுகின்றனர். விடுமுறை நாட்களில் படம் பிக் ஆனால் நல்ல வசூல் ஈட்டும் என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ஒன்னா இருந்தோம்! அதுக்கப்புறம் கண்டுக்கவே இல்ல.. அஞ்சலி இப்படிப்பட்டவரா?

Saranya M
Published by
Saranya M