94 வயதிலும் அதே வேகம்! 3 மாதங்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்த சிங்கீதம் சீனிவாசராவ்
இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் தமிழில் திக்கற்ற பார்வதி, கமல்ஹாசன் நடித்த ராஜ பார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும் ,சின்ன வாத்தியார், காதலா காதலா, மும்பை எக்ஸ்பிரஸ் என பல படங்களை இயக்கியுள்ளார். தமிழில் பெரும்பாலும் கமல்ஹாசனின் படங்களையே அதிகம் இயக்கியுள்ளார். சொல்லபோனால் கமலின் ஆஸ்தான இயக்குனர்களில் இவரும் ஒருவர்.
தற்போது 94 வயதான சிங்கீதம் சீனிவாசராவ் கடந்த பிப்ரவரி மாதம் புதிய படம் ஒன்றை இயக்குவதாக அறிவிப்பு வந்தது. ஆனால் 3 மாதங்களில் அந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளார் அவர். இதனை பலரும் ஆச்சர்யமாக பார்க்கின்றனர். இந்த வயதில் இவ்வளவு சுறுசுறுப்பா என்று பலரும் வியக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசரை வெளியிட்டனர் படக்குழு. சிங் கீதம் எனப் பெயரிடப்பட்டுள்ள அயான், அஹில்யா, ஷாலினி நடித்துள்ள இப்படத்தின் டீஸர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. 94 வயதான சியக்குன்ர் இந்த கால இளைஞர்களின் என்ணத்தை புரிந்து படம் எடுத்துள்ளத் டீஸரை பார்க்கையில் தெரிகிறது. இசையை தேவி ஸ்ரீபிரசாத் அமைத்துள்ளார்.
