ஒவ்வொரு பாடலும் சூப்பர் ஹிட்.. ஆனால் சம்பளம் இவ்ளோதானா? புலம்பும் பாடகர் அந்தோணி
அந்தோணி தாசன்: தற்போது எந்த ஒரு பார்ட்டி ஆனாலும் அங்கு ஒலிக்கும் பாடலாக பெரும்பாலும் இருப்பது விடாமுயற்சி படத்தில் அமைந்த சவதிகா பாடல் தான். அஜித், திரிஷா நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் தயாராகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் அமைந்த இந்தப் பாடலை பாடியவர் நாட்டுப்புற பாடகர் அந்தோணி தாசன். இவர் குரலில் இந்தப் பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறது.
பல மொழிகளில் பாடும் அந்தோணி: பெரும்பாலும் இந்த பாடல் தான் அனைவரின் பிளே லிஸ்டில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் ஆகவும் திகழ்ந்து வருகிறது. பொதுவாக அந்தோணி தாசன் குரலில் அமைந்த பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதில் சவதிகா பாடலும் அடங்கும். எண்ணற்ற பாடல்களை பாடி இருக்கும் அந்தோணி தாசன் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி என பல மொழிகளில் பாடி வருகிறார் .
100க்கும் மேல் பாடி சாதனை: இதில் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 100 பாடல்களுக்கும் மேல் பாடி இருக்கிறாராம். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி கலந்த கலவையிலும் பாடல்களை பாடி இருக்கிறேன். தனியாக ஹிந்திப் பாடலையும் பாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன். அதுமட்டுமல்ல இன்னும் பல மொழிகளில் பாட முயற்சித்து வருகிறேன் என ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
ஓடியோ நிறுவனம்: இவர் சொந்தமாக போக் மார்லி ரெக்கார்ட்ஸ் எனும் பெயரில் ஒரு புதிய ஓடியோ நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிறுவனம் மூலம் திறமைகள் இருந்தும் அதை வெளிப்படுத்த இயலாத பல கலைஞர்களை அடையாளப்படுத்துவதற்காக ஒரு புதிய தளம் தேவைப்பட்டது. அதற்கான ஒரு தளமாக தான் இவருடைய இந்த ஓடியோ கம்பெனி உதவி வருகிறது .
இந்த நிலையில் தன்னுடைய சம்பளம் பற்றி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் அந்தோணி தாசன். தமிழை விட மற்ற மொழிகளில் தான் இவருக்கு சம்பளம் அதிகமாக வழங்கப்படுகிறதாம் அதற்கு காரணம் மற்ற மொழிகளில் பாடுவது எனக்கு கொஞ்சம் சிரமம். அந்த மொழிக்கு ஏற்ப அதை எழுதி பாடுவதினால் இங்கு தமிழில் இரண்டு மணி நேரம் ஒரு பாடலை பாடி முடிப்பதற்கு மற்ற மொழிகளில் ஆறு மணி நேரம் எடுத்துக் கொள்கிறேன்.
அதனால் அந்த சிரமத்திற்காகத்தான் எனக்கு அங்கு சம்பளம் அதிகமாக கொடுக்கிறார்கள். தமிழில் அந்த அளவுக்கு சம்பளம் இல்லை என கூறி இருக்கிறார் அந்தோணி தாசன். ஆனால் இவர் பாடிய அனைத்து தமிழ் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.