பாலியல் தொல்லை…. ரவி மோகன் குறித்து கெனிஷா ஆதங்கம்!
நடிகர் ரவி மோகன்:
தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய காதல் மனைவியான ஆர்த்தியை பிரிந்த பின்னர் பாடகி கெனிஷா என்பவருடன் லிவிங் லைப் வாழ்ந்து வருகிறார்.
தன்னுடைய மனைவி ஆர்த்திக்கு இன்னும் ஜெயம் ரவி விவாகரத்து கொடுக்காத நிலையில் பாடகி கெனிஷாவுடன் லிவிங் லைப் வாழ்ந்து வருவது ஆர்த்தியை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. அவ்வப்போது இது குறித்து அவர் கருத்தும் தெரிவிப்பதுண்டு .
போராட்டம் நிறைந்த வாழ்க்கை:
மேலும் கெனிஷா என்னைப் பற்றி எதுவும் பேசக்கூடாது என வழக்கு தொடர்ந்திருந்தார். அது குறித்து நீதிமன்றம் சார்பில் கெனிஷாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் நடிகை கனிஷா தற்போது கூறி இருக்கும் விஷயம்தான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
ஆம். என் வாழ்க்கையை ஒரு போராட்டம் நிறைந்த வாழ்க்கை தான். நடிகர் ரவி மோகனின் குடும்ப பிரச்சனைக்கு நான் தான் காரணம் என்று கூறுகிறார்கள். இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுக்கிறது. உண்மையில் நான் காரணம் இல்லை. என் வாழ்க்கை மிகவும் போராட்டம் நிறைந்ததாக தான் இருக்கிறது .
பாலியல் தொல்லை:
என்னுடைய சிறுவனதில் பாலில் கொடுமைகள், கணவரின் தாக்குதல், குழந்தையை இழந்தது, பெற்றோர் மறைவு, இப்படி தொடர்ச்சியாக என் வாழ்க்கையில் நான் சோகமான பக்கங்களையே பார்த்து வருகிறேன். இப்போது ரவி மோகனுடன் சேர்ந்து இருப்பது ஏகப்பட்ட பிரச்சனையை மேலும் கொடுக்கிறது.
ஆனால் இது எனக்கு அவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. காரணம் நான் இதைவிட பெரிய கஷ்டம் எல்லாம் பார்த்து விட்டேன். என் வாழ்க்கையே ஒரு போராட்டம் நிறைந்தது தான் என உருக்கமாக கெனிஷா கூறியிருக்கிறார்.
மேலும் ரவி மோகனை நான் தான் வசியம் செய்து வைத்திருக்கிறேன்என்றும் அவர் என்னால்தான் குடும்பத்தை விட்டு பிரிந்தார் என்றெல்லாம் கூறுகிறார்கள்.
ரவி மோகன் ஒன்றும் குழந்தை அல்ல… தன் முடிவுகளை தானே எடுக்கும் எடுக்கும் அளவுக்கு அவர் மெச்சூர் ஆன ஆண் மகன் தான் என பதிலடி கொடுத்திருக்கிறார் கெனிஷா.
