தஞ்சாவூரு மண்ண எடுத்து!.. பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்!....
ஏராளமான நாட்டுப்புற மற்றும், இந்து, கிறிஸ்தவ மத பாடல்களை பாடியவருமான, சினிமா பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 74. மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் இசையில் கிருஷ்ணராஜ் நிறைய படங்களை பாடியிருக்கிறார்.
காதல் கோட்டை படத்தில் இடம்பெற்ற வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா பாடல் மூலம் இவர் பிரபலமானார். அதேபோல், சேரன் இயக்கத்தில் முரளி நடித்த பொற்காலம் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தஞ்சாவூரு மண்ணை எடுத்து’ பாடலுக்கு சிறந்த பின்னணி பாடுவதற்கான தமிழக அரசின் விருதையும் இவர் பெற்றார்.
அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் கிருஷ்ணராஜ் பாடினார். கடைசியாக சூரரைப் போற்று திரைப்படத்தில் ‘நாலு நிமிஷம்’ என்கிற பாடலை இவர் பாடியிருந்தார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணராஜ் இன்று சென்னை வளசர பக்கத்தில் உள்ள அவரின் வீட்டில் காலமானார். அவரின் உடல் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. தேவா மறந்து சில நாட்களிலேயே கிருஷ்ணராஜ் மறைந்தது சினிமா ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
