நங்கை, மீசை பியூட்டி ஹிட் பாடகருக்கு இந்த நிலைமையா? தேடிச் சென்று உதவிய பாலா
பிரபல பாடகர் ரிச்சர்ட் ஆலிசனை ஞாபகம் இருக்கிறதா? ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஜெயம் ரவி நடித்த எங்கேயும் காதல் படத்தில் இடம்பெற்ற 'நங்கை' பாடலாகட்டும், உதயநிதி நடித்த நண்பேன்டா படத்தில் இடம்பெற்ற 'நீ சன்னோ நியூ மூனோ என்ற பாடலாகட்டும் அனிருத் இசையில் ரெமோ படத்தில் இடம்பெற்ற மீசை பியூட்டி பாடல்களை பாடியவர் அவர். அவரை பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பிலை. ஆனால் அவர் பாடிய பாடல்களை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இந்த அற்புதமான பாடல்களை பாடிய அவர் தற்போது பக்கவாதத்தால் ஒரு கை மற்றும் வாய் பாதிக்கப்பட்டு பேசமுடியாமல் உள்ளார்.
கலக்கபோவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலா பலருக்கும் வீடு தேடி சென்று உதவி செய்பவர். அவர் தற்போது ரிச்சர்ட்டுக்கு உதவியுள்ளார். இது குறித்த வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்தபின்புதான் அவருக்கு இந்த நிலையா என்று பலருக்கும் தெரிய வந்துள்ளது. அவருக்கு பாலா நிதியுதவி செய்ததை பலரும் வாழ்த்தியதோடு அல்லாமல் ரிச்சர்ட் மீண்டு வருவார் என்றும் கெமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
