Categories: Cinema News latest news

விஜய் சாங் உட்பட இதெல்லாம் இவர் பாடியதா? வாய்ப்பு இல்லாமல் அவருடைய பரிதாப நிலை

Singer Sathyan: தமிழில்  ‘துப்பாக்கி’ படத்தில் குட்டி புலி கூட்டம் என்ற பாடலில் தொடங்கி பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய பாடகர் ஒருவருக்கு இப்போது வாய்ப்புகள் சரிவர வராததால் ஒரு ஹோட்டலில் வேலை பார்க்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அவர் வேறு யாருமில்லை பாடகர் சத்யன். கழுகு படத்தில்  ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்’, மாற்றான் படத்தில் ‘ தீயே தீயே’ போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை தமிழ் சினிமாவிற்காக கொடுத்தவர்.

கிட்டத்தட்ட 200 பாடல்களை பாடி இருக்கிறார். அவர்தான் இப்போது ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றாராம். முதலில் அமெரிக்காவில் ஹோட்டல் மேற்பார்வையாளராக இருந்திருக்கிறார். வாய்ப்பு கிடைக்காமல் இந்த நிலைக்கு தள்ளப்பட்டதாக ஒரு பேட்டியில் சத்யன் கூறி இருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது பிரபல இசையமைப்பாளர்கள் எங்களைப் போன்ற பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

இதையும் படிங்க: ஒரே சீன் வேறு வேறு எபிசோட்… டைரக்டர் சார் நீங்க ஜவ்வா இழுக்குறீங்க தெரிதா?

ஆனால் அவர்களும் ரியாலிட்டி ஷோகளில் மிகவும் பிரபலமான சிங்கர்களை மட்டும் தான் தேர்ந்தெடுத்து வாய்ப்புகள் கொடுத்து வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் அவர்கள் நடத்தும் கச்சேரிகளுக்கும் அந்த மாதிரி பாடகர்களை தான் அழைத்துக் கொண்டு செல்கிறார்கள். இப்போது ஏகப்பட்ட சேனல்களில் பாடலுக்கு என பல ரியாலிட்டி ஷோக்கள் நடந்து கொண்டு வருகின்றன.

அதன் மூலம் பல பாடகர்கள் பின்னணி பாடவர்களாக மாறி வருகிறார்கள். இதனால் ஏற்கனவே சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த பாடகர்களுக்கு வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன. அதனால் தங்களை பிரபலமாக்குவதற்கு வேற என்ன செய்யலாம் என்று அந்தப் பாடகர்களின் நிலைமை மாறிவிடுகிறது. இன்னும் சில பாடகர்கள் இந்த வேலையே வேண்டாம் என விவசாயமும் பார்க்க சென்று விடுகிறார்கள்.

இதையும் படிங்க: அப்பனுக்கே பாடம் புகட்டிய எம்ஜிஆர்… இது எப்போ நடந்தது? பழசு கூட புது மேட்டரா இருக்கே..!

நான் ஒரு சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டிருக்கின்றேன். அதில் ஒரு ரியாலிட்டி ஷோவில் மீண்டும் பிரபலமாக நான் போட்டியாளராக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டேன். ஆனால் அவர்கள் உங்களை நாங்கள் சேர்த்துக் கொண்டால் எங்களுக்கு பிரச்சனை வரும் என உதறி தள்ளி விட்டார்கள் என சத்யன் அவருடைய ஆதங்கத்தை கூறினார்.

Published by
Rohini