jyothika
Jyothika: சூர்யாவின் நடிப்பில் கடந்த 14 ஆம் தேதி ரிலீஸான திரைப்படம் கங்குவா. படம் வெளியாகி முதல் நாளில் இருந்தே கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது. யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்தப் படத்திற்கு நெகட்டிவ் கமெண்ட்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் இரண்டு வருடமாக படத்தை எதிர்பார்த்து அனைவரும் காத்துக் கொண்டிருக்க படம் இந்தளவு விமர்சனத்தை சந்திக்குமா என்பதையும் எதிர்பார்க்கவில்லை.
அதற்கு காரணம் படம் ரிலீஸாவதற்கு முன் புரோமோஷனில் மொத்தப் படக்குழுவும் வெளிப்படுத்திய பில்டப்தான். அதுலயும் குறிப்பாக ஞானவேல் ராஜாவின் பேச்சு யாருக்குமே பிடிக்காமல்தான் இருந்தது. படத்தை மிகைப்படுத்தி ஓவர் பில்டப் செய்திருந்தார் ஞானவேல் ராஜா. இதற்கிடையில் நேற்று ஜோதிகா திடீரென ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் கங்குவா படம் பற்றியும் அதற்கு வந்த எதிர்மறையான விமர்சனங்களை பற்றியும் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: மனோஜின் திருட்டுத்தனம்… பாண்டியனால் கடுப்பாகும் மீனா… பாக்கியாவிடம் சண்டைக்கு நிற்கும் செழியன்
ஒர்க் அவுட் ஆகல: அதாவது சூர்யாவின் மனைவியாக இதை எழுதவில்லை. சினிமா ரசிகையாகவும் ஜோதிகாவாகவும் எழுதுகிறேன். நடிகராக இருப்பதற்காகவும் , தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்ற வேண்டும் எனும் சூர்யாவின் கனவை நினைத்து பெருமைப் படுகின்றேன். படத்தின் முதல் 30 நிமிடங்கள் ஒர்க் அவுட் ஆகவில்லைதான். ஒலியும் சரியாக இல்லைதான்.
அதே சமயம் குறைபாடுகள் என்பது படத்தின் ஒரு பகுதி. ஆனால் கங்குவ படத்திற்கு எதிராக திட்டமிட்டே தவறான கருத்துக்கள் பகிரப்பட்டுக் கொண்டு வருகின்றன. படத்தின் கேமிரா வேலைப்பாடு, 3டி தொழில்நுட்பம் பெண்கள் சண்டைசெய்யும் காட்சிகள் என பல விஷயங்கள் பாராட்டும் விதமாக உள்ளது. இதை பற்றி யாரும் கருத்து தெரிவிக்க வில்லை. மேலும் கங்குவா சினிமாவில் ஒரு கண்கவர் படமாகும் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
வாணவேடிக்கையான கங்குவா: அதனால் ஜோதிகாவிற்கு எதிராக பல மீம்ஸ்கள் உருவாகி வருகின்றன. இதில் பிரபல பாடகி சுசித்ரா ஜோதிகாவி கண்டபடி திட்டி ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதாவது பொண்டாட்டினு சொல்லி என்ன மாதிரியான விஷயங்களை பேசியிருக்கு இந்த பொம்பள? படத்தை பற்றி இப்படி பேசியது மேலும் கங்குவா படத்திற்கு பாதிப்பைத்தான் ஏற்படுத்தும். அதோடு இது ஒரு வாண வேடிக்கை என ‘spectagles’ என பயன்படுத்தியிருக்கிறாள்.
kanguva
இதையும் படிங்க: அந்த நடிகரைப் பார்த்துப் பயந்த ரஜினி… சிறந்த அறிவாளி, நல்ல நண்பராம்… ஆனால் கமல் அல்ல!
இங்கிலீஷ் தெரிஞ்சா எழுதனும். அல்லது வேறு யாரையாவது வச்சு எழுத சொல்லனும். i am so proud of suryaனு எழுதியிருக்கிறாள். மேலும் என்னைக்காவது சினிமாவை தாங்கிப் பிடிக்கனும்னு சூர்யா இதற்கு முன் சொல்லியிருக்கானா? எப்ப பாத்தாலும் சூர்யா ஜோதிகா, சூர்யா ஜோதிகானு சொல்லிட்டு இருக்கீங்க. இவர்கள் என்ன மாற்றான் பிரதர்ஸா என்று கடுமையாக வசை பாடியிருக்கிறார் சுசித்ரா.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…