Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த நிமிஷம் வந்துச்சுப்பா! நீங்க ரெடியா?
Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொடராக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் பல நாட்களாக எதிர்பார்த்து வந்த முத்துவின் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் ஒளிபரப்பப்பட இருக்கிறது. இதற்கான புரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
முத்து மற்றும் மீனா இருவரும் கிரிஷ் ஜெயிலுக்கு போகாமல் காப்பாற்ற போராடிக்கொண்டு இருக்கின்றனர். மகேஷ்வரி வீட்டுக்கு வந்து கிரிஷை அழைத்து செல்ல அவர் நடவடிக்கை சரியில்லாமல் இருக்க மீனா அவரை சந்தேகமாக பார்க்கிறார்.
கிரிஷிடம் வீட்டுக்கு செல்லலாமா எனக் கேட்க அவர் என்ன சொல்ல போகிறார் என ரோகிணி யோசனையாக கேட்க கிரிஷ் போகலாம் எனக் கூறி விடுகிறார்.ரோகிணியை காப்பாற்ற மகேஸ்வரி அவர் பேக்கில் உட்கார்ந்து இருக்கிறார். இதனால் மீனா தண்ணி கேட்க அதற்கும் எழுந்து போகாமல் இருக்க மீனா யோசனையாக கிளம்புகிறார்.
ரோகிணி வெளியில் வர மகேஸ்வரி அவரை திட்டுகிறார். ரோகிணியிடம் உன் பேக்கை எடுத்துட்டு போக மாட்டியா என்கிறார். இது ஒருபுறமிருக்க வீட்டுக்கு வரும் மனோஜ் கிரிஷ் விஷயத்தை போர்டிங் ஸ்கூல் மேனேஜர் சொன்னதை சொல்கிறார்.
இவனை போல அவனும் ரவுடியா போக போகிறான் எனக் கூற குடும்பமே அதிர்ச்சி ஆகிறது. முத்துவை மேலும் அசிங்கப்படுத்த இவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு போனவன் தானே எனக் கூற மீனா அதிர்ச்சியாக முத்துவை பார்க்கிறார்.
பின்னர் அவர் வருத்தப்பட்டு அங்கிருந்து சென்று விட மனோஜை அடிக்கும் அண்ணாமலை அவன் வாழ்க்கை ஏற்கனவே நாசம் பண்ணிட்ட இனிமேல் பேசுன அடி பெரிசா வாங்குவ எனத் திட்டுகிறார்.மாடியில் இருக்கும் முத்துவிடம் ஆறுதலாக பேசும் மீனா என்ன நடந்தது எனக் கேட்கிறார்.
இதை தொடர்ந்து நாளைய எபிசோடில் முத்து கூட இருக்க கூடாது என ஜோசியர் கூறிவிட பாட்டி வீட்டில் விடுகிறார் அண்ணாமலை. அங்கு முத்துவுக்கு என்னமோ நடந்து இருக்கு எனத் தெரிகிறது. இதனால் சிறகடிக்க ஆசையின் டிஆர்பியில் வரும் வாரங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
