
latest news
Siragadikka Aasai: அம்மா பாசத்துக்காக ஏங்கும் கிரிஷ்… சுயநலமாக யோசிக்கும் ரோகிணி!
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
முத்து கிரிஷின் பள்ளியில் நம்பர் மற்றும் படம் எதுவும் கொடுத்து இருப்பாங்களே என மீனா கேட்க உடனே முத்துவும் நல்ல ஐடியா என அண்ணாமலையை அழைக்கிறார். அவரும் வந்து கிரிஷ் பாட்டி குறித்து எதுவும் தெரிந்ததா எனக் கேட்க அவர் இல்லை என்கிறார்.
ஆனால் பள்ளியில் எதுவும் கொடுத்து இருப்பாங்களே எனக் கேட்க அண்ணாமலையும் அப்படித்தான் நான் விசாரிச்சு பாக்கிறேன் என்கிறார். போலீஸில் கம்ப்ளையண்ட் கொடுக்கலாம் எனக் கூற ரோகிணி நம்ம மாட்டிபோமே எனக் கூறி அதெல்லாம் வேண்டாம் பின்ன நம்ம வீட்டுக்கு தான் போலீஸ் வருவாங்க என்கிறார்.
அண்ணாமலை வந்து நம்பர் அவங்க பாட்டியோடதுதான் இருக்காம். போட்டோ இருந்தா அனுப்புறேனு சொல்லி இருப்பதாக சொல்கிறார். அப்போ போட்டோ வர முத்து வாங்கி எல்லாருக்குமே அதை அனுப்புகிறார். விஜயா இப்போ என்ன இந்த பையனை ஆசிரமத்துக்கு அனுப்புங்க என்கிறார்.
அண்ணாமலை சத்தம் போடுகிறார். பின்னர் எல்லாரும் சென்று விட மீனா மற்றும் முத்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் அவங்க பாட்டி இப்படி விட்டு போற ஆள் இல்லை. இதுக்கு பின்னாடி பெரிய காரணம் இருக்கு என மீனா சொல்ல அவங்களை கண்டுபிடிச்சா தெரிஞ்சிடும் என்கிறார் முத்து.

நடு இரவில் கிரிஷ் எழுந்து ரோகிணி சென்று எழுப்புகிறார். அவர் எழுந்து எதுக்கு இங்க வந்த எனக் கேட்டாலும் பையனை கொஞ்சுகிறார். நான் இங்கையே இருக்கேன் எனக் கேட்க ரோகிணி வேண்டாம் என்கிறார். திடீரென மனோஜ் எழுந்து தூக்கத்தில் உளர கிரிஷ் சிரிக்கிறார். பின்னர் அவரை வெளியில் அழைத்து வர சரியாக முத்து, மீனா வந்து விடுகின்றனர்.
என்ன ஆச்சு என முத்து கேட்க பாத்ரூம் வந்ததாக சொல்லிவிடுகிறார். மீனாவுக்கு சந்தேகம் வர ஆனால் முத்து பாத்ரூம் இல்லனு போய் இருப்பான் எனக் கூறிவிடுகிறார். மனோஜ் அடுத்த நாள் வந்து இந்த பையனை எப்போ அனுப்புவீங்க எனக் கேட்கிறார்.
அவங்க பாட்டியை கண்டுபிடிச்ச பிறகு அனுப்புவோம் எனக் கூற கிடைக்கலைனா அதுவரை கிரிஷ் இங்க தான் இருப்பான் என்கிறார். சரி அப்போ வோட்டிங் வைப்போம் எனக் கூற கிரிஷ் இருப்பதற்கு முத்து, மீனா, அண்ணாமலை ஓகே சொல்கின்றனர்.
வேண்டாம் என்பதற்கு மனோஜ், விஜயா கையை தூக்குகின்றனர். கிரிஷ் எல்லாரிடமும் நான் இங்கையே இருக்கேன் என கெஞ்சுகிறார். எல்லாரும் அதிர்ச்சியில் இருக்க ரோகிணியும் கையை பிசைந்து கொண்டு நிற்கிறார். மனோஜ் என்ன இரக்கப்படுறீயா? கையை தூக்கு என்கிறார். ரோகிணி கையை தூக்க கிரிஷ் பிடித்து நிறுத்தி விடுகிறார்.