1. Home
  2. Latest News

Siragadikka Aasai: காணாமல் போன கிரிஷ்… மீனாவுக்கு எழுந்த திடீர் சந்தேகம்… பதட்டத்தில் ரோகிணி!

Siragadikka Aasai: காணாமல் போன கிரிஷ்… மீனாவுக்கு எழுந்த திடீர் சந்தேகம்… பதட்டத்தில் ரோகிணி!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள். 

வித்யா வீட்டுக்கு கிரிஷை அழைத்து வரும் ரோகிணி இந்த ஒரு வாரத்துக்கு மட்டும் இவன் இங்க இருக்கட்டும் என்கிறார். வித்யா உனக்கு உன் வாழ்க்கை எப்படி முக்கியமோ? அதுபோல எனக்கும் முக்கியம். ஒரு வாரம் பார்ப்பேன். அதற்கு பிறகு நானே கொண்டு வந்து விட்டுவிடுவேன் என்கிறார். 

ரோகிணி ஒரு வாரம் டைம் தா. கண்டிப்பா வந்து அழைச்சிட்டு போயிடுவேன் எனக் கூறி விடுகிறார். கிரிஷிடம் நீ இங்க ஒரு வாரம் இரு என ரோகிணி கூற நான் உங்க கூடவே வருவேன் என அடம் பிடிக்கிறார். வித்யா ஆண்ட்டி உனக்கு பிடிக்கும் தானே எனக் கூற கிரிஷ் சமாதானம் ஆகிறார். 

வீட்டிற்கு வரும் அண்ணாமலை ஸ்நாக்ஸ் பையை எடுத்து வர கிரிஷ் ஸ்கூலில் இருந்து வந்தவுடன் இதை கொடு எனச் சொல்லி தருகிறார். முத்து அமைதியாக வீட்டிற்குள் வர அண்ணாமலை கிரிஷ் எங்கடா எனக் கேட்க அவங்க அம்மா வந்து பாட்டிக்கு சீரியஸ்னு சொல்லி டிசியை வாங்கி சென்றதாக கூறுகிறார். 

அது எப்படி ஒரே நாளுல போக முடியும். அவங்க பாட்டி சீரியஸா இல்லையே. நல்லாதானே இருந்தாங்க. கிரிஷிடம் என் நம்பர் இருக்கு அவங்க நமக்கு கூட ஒரு போன் பண்ணலையே. எனக்கு என்னமோ கிரிஷ் பின்னாடி பெரிய ரகசியம் இருப்பதால் நமக்கு தெரிய கூடாதுனு நினைப்பதாக சொல்கிறார். 

Siragadikka Aasai: காணாமல் போன கிரிஷ்… மீனாவுக்கு எழுந்த திடீர் சந்தேகம்… பதட்டத்தில் ரோகிணி!
#image_title

அண்ணாமலை எனக்கும் கிரிஷ் போனதில் வருத்தம் தான். ஆனால் அவன் அம்மா கூட தானே போயிருக்கான். அவங்க பாத்துப்பாங்க என்கிறார். ஆனால் எப்படி அந்த பொண்ணு உடனே வந்துச்சு. முதலில் அந்த பொண்ணை கண்டுபிடிக்கணும் எனப் பேசிக்கொள்ள ரோகிணி அதிர்ச்சியாகிறார்.

பின்னர் மீனா அம்மா பூ கட்டும் கோயிலில் உள்ளே ரோகிணியின் அம்மா அன்னாதானம் சாப்பிட்டு கொண்டு இருக்கிறார். மீனா அம்மா, மீனா இருவரும் கிரிஷ் குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். சாப்பிடவில்லை எனக் கூறி உள்ளே செல்கின்றனர். அப்போ மீனாவுக்கு மாலை ஆர்டர் குறித்து விசாரிக்க அவர் போன் பேசிவிட்டு வருகிறார். 

அதே லைனில் இருக்கும் ரோகிணியின் அம்மா மீனாவை பார்த்துவிட்டு மறைந்து கொள்கிறார். நான் இனிமே உன் கண்ணில் படவே கூடாதும்மா என்கிறார். தொடர்ந்து விஜயா மற்றும் பார்வதி இருவரும் டான்ஸ் கிளாஸ் இருந்தவரை நல்லா இருந்துச்சு.

இப்போ அது இல்லாம போர் அடிக்கிது என்கிறார். என்ன பிசினஸ் செய்யலாம் எனக் கேட்க எம்பிராயிடிங் போடலாமா எனக் கேட்க விஜயா அதெல்லாம் வேண்டாம் என்கிறார். அப்போது விஜயாவை பார்க்க சிந்தாமணி வருகிறார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.