Siragadikka aasai: ரோகிணியால் மனோஜுக்கு நடந்த பெரிய சம்பவம்… திருந்துக்கப்பா!
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
முத்து மீனாவின் அம்மாவிற்கு பணம் கொடுத்துவிட்டு இருக்க அருண் விடாப்பிடியாக இருந்து அந்த பணத்தை மீனாவிடம் திரும்பி கொடுக்க வைத்து விடுகிறார். மீனாவின் அம்மாவும் என்னிடம் பணம் இருக்கு இதை நீ மாப்பிள்ளை இடமே கொடு என அவரிடம் தன்மையாக பேசி அதை கொடுத்து விடுகிறார்.
பின்னர் எல்லோரும் ஊருக்கு கிளம்ப அருண் மட்டும் இன்னைக்கு உன்னுடைய பணத்தை வேணாம்னு சொல்ல வச்சேன். உன்னையே ஒரு நாள் வேணான்னு சொல்ல வைப்பேன் என மனதுக்குள் பேசிக்கொள்கிறார். பின்னர் சத்தியா தன்னுடைய அம்மாவிடம் உன்னை மாத்தி மாத்தி நல்லா கவனிச்சுக்க ரெண்டு மருமகன்கள் இருக்காங்க என்கிறார்.
பின்னர் எல்லோரும் ஊருக்கு கிளம்ப அவங்களை வழியனுப்பி வைத்து விட்டு மீனா வீட்டிற்கு செல்கிறார். மனோஜ் ஷோரூமுக்கு ராஜா மற்றும் ராணி வருகின்றனர். திருடிய காசை எடுத்து வந்து விட்டீர்களா என கேட்க ஏதாவது இருந்தாலும் எங்களுடைய வக்கீலிடம் பேசுங்கள் என்கிறார்கள்.
மனோஜ் வக்கீலிடம், என்ன விஷயம் என கேட்க இவர்கள் எல்லாத்தையும் என்னிடம் சொல்லிவிட்டதாக கூறுகிறார். உடனே மனோஜ் காசு எப்போ கொடுப்பீங்க என கேட்க, நீங்க அந்த பொண்ணுக்கிட்ட தப்பா நடந்துக்கிட்டது தான் பிரச்னை எனக் கூற ரோகிணி மற்றும் மனோஜ் அதிர்ச்சி அடைகின்றனர்.
நான் எந்த பொண்ணிடமே சிரிச்சு கூட பேச மாட்டேன் என தன்னுடைய ஷோரூமில் வேலை செய்யும் பெண்களிடம் கேட்க அவர்கள் எதுவும் பேசாமல் தலை குனிந்து கொள்கின்றனர். மனோஜ் அதிர்ச்சியாக ஓ இப்படித்தான் மிரட்டி வச்சி இருக்கீங்களா எனக் கேட்க அவர் நான் தப்பா நடந்துக்கிட்டத்தை நீங்க பாத்தீங்க எனக் கேட்கிறார்.
அப்போ திருடுனதை நீங்க பாத்தீங்களா எனக் கேட்க மனோஜ் அமைதியாகிறார். ரோகிணி என் புருஷனை பத்தி எனக்கு தெரியும் என சப்போர்ட்டாக பேசுகிறார். அதெல்லாம் இல்ல இப்பையே போலீஸுக்கு போவோம் எனக் கூற மனோஜ் வேண்டாம் சார். தப்பா போய்டும் எனக் கெஞ்ச அப்போ இங்கையே பேசி முடிச்சிப்போம் என்கிறார்.
உடனே ரோகிணியும் போலீஸுக்கு போனால் தனக்கு பிரச்னை என்பதால் அவரும் இதற்கு சம்மதிக்க அப்போ இவங்க திருடுனதா சொன்ன 3 லட்சத்தை இவங்களிடமே கொடுங்க எனக் கேட்க அதிர்ச்சி அடைகின்றனர். ரோகிணி வேண்டும் என்றால் இவங்களை வேலைக்கு வச்ச பாவத்துக்கு ஒரு லட்சம் தருகிறோம் என்கிறார்.
சரியென முதல் பாகமாக 25 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு செல்கின்றனர். ஸ்ருதி தன்னுடைய ரெஸ்டாரெண்ட் பத்திரிக்கையை நீத்துவிற்கு வைக்க அங்கு செல்கிறார். திறப்பு விழா என பத்திரிக்கை கொடுக்க அவ்வளவு தூரம் வந்தாச்சா என்கிறார்.
அவரும் ஆமாம் எனக் கூற ரவி வர அவருக்கும் பத்திரிக்கை கொடுக்கிறார். நீ இப்ப கூட என் ரெஸ்டாரெண்டுக்கு வந்து சேரலாம் என்கிறார். நீத்து அவர் மாதிரி ஒரு ஆள் கிடைக்காது. க்ளோனிங் தான் எடுக்கணும் என்கிறார். வேண்டாம். இவன் கூட நான் லைஃபை சேர் செஞ்சி இருக்கேன். வேற நல்ல செஃபை பாத்துக்கிறேன் என ஸ்ருதி செல்ல ரவி நான் இங்கே தான் இருப்பேன் என நீத்துவிடம் சொல்லிவிட்டு செல்கிறார்.
நீத்து நாளைக்கே ரவி வெளியில் செல்லலாம் என்பதால் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என யோசிக்கிறார். முத்து மற்றும் மீனா வீட்டில் பேசிக்கொண்டு இருக்க அவர் அம்மாவிடம் கொடுத்த காசை கொடுக்க ஏன் மறந்துட்டீயா என முத்து கேட்கிறார்.
மீனா இல்ல எனக் கூற அங்கு நடந்ததை சொல்கிறார். முத்துவும் சரியென உண்டியலில் போடச்சொல்ல மீனா ஆச்சரியமாக பார்க்கிறார். கோபம் இல்லையா எனக் கேட்க கல்யாணத்துக்கு முன், பின் தான். சீதா நல்லா இருக்கணும் எனக் கூற அவருக்கு முத்தம் கொடுக்கிறார் மீனா.
ரோகிணி கிரிஷை அழைத்துக்கொண்டு போர்டிங் ஸ்கூலுக்கு வர அதை பார்த்து கிரிஷ் அதிர்ச்சி அடைகிறார். ஏற்கனவே பிரச்னை வந்ததால் மகேஸ்வரியை கார்டியனாக சைன் போடச்சொல்ல அவரும் அந்த விவரங்களை தருவதாக சொல்கிறார். கிரிஷ் அழுதுக்கொண்டு இருக்கிறார்.
