Siragadikka Aasai: கிரிஷ் பள்ளியில் மீனா, மனோஜ்… வெடிக்க போகும் பிரச்னை… மாட்டுவாரா ரோகிணி?
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
கிரிஷ் பள்ளியில் இருக்கும் மாணவர்களை காண அவர்களின் அப்பா, அம்மா வந்திருக்க கிரிஷ் தனியாக நின்று கொண்டு இருக்கிறான். அவர்கள் கிரிஷிடம் வந்து உங்க வீட்டில் இருந்து யாருமே வரலையா? உனக்கு அப்பா, அம்மா இல்லையா என விமர்சிக்கின்றனர்.
இதில் கடுப்பாகும் கிரிஷ், அங்கிருந்து சென்று பள்ளியின் இன்சார்ஜிடம் என் அம்மாக்கு கால் செய்ய வேண்டும் எனக் கேட்க அவர் இந்த நேரத்தில் கால் செய்ய கூடாது என்கிறார். இருந்து கிரிஷ் அடம் பிடிக்க என்னிடம் உன் கார்டியன் நம்பர் தான் இருக்கு என்கிறார்.
ஆனால் கிரிஷ் எனக்கு அம்மா நம்பர் தெரியும் எனக் கூறி ரோகிணிக்கு கால் செய்கிறார். ரோகிணி போனை எடுத்து ஹலோ எனக் கூற கிரிஷ் அம்மா என்கிறார். ரோகிணி பதறி ரூமை பூட்டிவிட்டு எனக்கு எப்படி கால் செஞ்ச எனக் கேட்க சாரிடம் வாங்கி பண்ணியதாக சொல்கிறார்.
பின்னர் ரோகிணியை தன்னை பார்க்க வருமாறு கிரிஷ் கேட்க அவர் இப்போது வர முடியாது. இன்னொரு நாள் வரேன் எனக் கூறுகிறார். தொடர்ந்து கிரிஷ் அடம்பிடிக்க பாட்டி மாதிரி நானும் தொலைஞ்சு போயிடவா எனக் கேட்க கிரிஷ் வேண்டாம், வேண்டாம் என அழுதுக்கொண்டே போனை கொடுத்து விடுகிறார்.
அதே போர்டிங் ஸ்கூலுக்கு மீனா வந்து இருக்க டெக்கரேஷன் விஷயமாக வந்து இருப்பதாக அங்கிருந்தவரிடம் சொல்ல அவர் காத்திருக்க சொல்கிறார். மீனாவும் வெயிட் செய்ய அப்போ சிந்தாமணி அங்கு வருகிறார்.
எதற்காக இங்க வந்த எனக் கேட்க நீங்க வந்ததுக்கு தான் நானும் வந்து இருக்கேன் என்கிறார். அப்போது மீனாவை அங்கிருந்தவர் அழைக்க இன்னொரு மேடம் வந்து சிந்தாமணியை நான் வரச்சொல்லி இருந்தேன். தாளாளர் அழைப்பதாக சொல்ல உள்ளே அழைத்து செல்கிறார்.
அங்கிருந்தவர் சாரி மேடம் அவங்க வரச்சொல்லி இருப்பாங்கனு தெரியலை என்கிறார். நீங்க உங்க கொட்டேஷன் அமவுண்ட் சொல்லுங்க எனக் கேட்க மீனா எப்படியும் அவர் தான் சொன்னதை விட கம்மியாதான் சொல்லுவாங்க எனக் கூற பரவாயில்லை சொல்லுங்க என்கிறார்.
மீனா, மனதில் எங்க போனாலும் பின்னாலே வரத்தானே உனக்கு இதான் சரியென நினைத்து 15 ஆயிரம் பூக்காசு மட்டும் போது என்கிறார். உடனே அந்த சாரும் உள்ளே போய் பேச போக சிந்தாமணி அப்போ வந்து கம்மியா பண்ணித்தரேன் அவ சொன்ன ரேட்டில் இருந்து 2 ஆயிரம் கம்மியாக பண்ணி தரேன் என்கிறார்.
அவரும் ஆச்சரியப்பட்டு 13 ஆயிரம் எங்களுக்கு ஓகே தான் எனக் கூற சிந்தாமணி அதிர்ச்சி அடைகிறார். அவர் சென்று விட மீனாவிடம் இதற்கு மொத்தமே 40 ஆயிரம் ஆகும் எனக் கூற மீனா தெரியும். எனக்கு இங்க டொனேஷன் கொடுக்க ஆசை. நீங்க சீனியர் செஞ்ச மாதிரி இருக்கட்டும் எனக் கூறி செல்கிறார்.
மீனா சென்று பைக்கை எடுக்க போக அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்து இருந்த கிரிஷ் அவரை பார்த்துவிட்டு ஓடுகிறார். ஆனால் மீனாவிற்கு காதில் விழாததால் அவர் சென்று விட கிரிஷை வாட்ச்மேன் பிடித்து விடுகிறார். வீட்டில் மனோஜ் ஸ்கூலுக்கு தயாராகி கொண்டு இருக்கிறார்.
அவருடைய பார்க் நண்பர் கிளம்பிட்டீயா என போன் செய்ய மனோஜ் தயாராகி கொண்டு இருப்பதாக சொல்கிறார். சரி அட்ரெஸை செக் செஞ்சிக்கோ எனக் கூறி மனோஜ் அட்ரெஸை சொல்ல அருகில் இருக்கும் ரோகிணி இது கிரிஷ் ஸ்கூலாச்சே என அதிர்ச்சி அடைந்து விடுகிறார்.
எப்படியாச்சும் இதை தடுக்கணுமே என யோசிக்க மனோஜ் அதற்குள் விஜயாவிடம் சொல்லிவிட்டு காரில் கிளம்பி விடுகிறார். ரோகிணி அவருக்கு கால் செய்து தனக்கு நெஞ்சு அழுத்துகிறது. மயக்கமாக வருவதாக சொல்லி பில்டப் கொடுத்து போனை கட் செய்ய மனோஜ் காரை திருப்பி கொண்டு ரோகிணியை பார்க்க செல்கிறார்.
