Siragadikka Aasai: விஜயாவுக்காக முத்து எடுக்கும் முடிவு… இதெல்லாம் தேவையா கோபால்!
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த சுவாரசிய அப்டேட்கள்.
மனோஜ் வாங்கிய கடனை காரணம் காட்டி சிந்தாமணி தன்னுடைய பைனான்சியர் மூலம் விஜயா குடும்பத்தையே வெளியேற்றி விட்டார். மீனாவின் வீட்டில் தங்கலாம் என முத்து கூறிய போது அங்கு தனக்கு பிடிக்காது என சொல்லிய விஜயா தற்போது ஸ்ருதியின் வீட்டில் தங்கி இருக்கிறார்.
ஆனால் அங்கு அவர் எதிர்பார்த்த சொகுசு கிடைத்தாலும் அவரை ஒரு மனுஷியாக கூட மதிக்காமல் ஸ்ருதியின் அப்பா மற்றும் அம்மா நடந்து கொள்வது விஜயாவிற்கு அவர்கள் மீதான கோபத்தை அதிகரித்துள்ளது. இதனால் அவர் பார்வதியிடம் உன் வீட்டிற்கு வருகிறேன் என கேட்கிறார்.
அவர் நீ என் வீட்டிற்கு தாராளமாக வரலாம் ஆனால் வந்தால் அண்ணனுடன் வரவேண்டும். இல்லையென்றால் நீ அவர் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும் என கூறி விடுகிறார்.
இதில் விஜயா சோகமாக இருக்க முத்து மற்றும் மீனா இருவரும் அண்ணாமலையுடன் விஜயாவை பேச வைக்க என்ன செய்யலாம் என யோசித்து கொண்டு இருக்கின்றனர். அப்பொழுது இருவரும் வீம்பாக பேசாமல் இருப்பதை சரி செய்ய போன் செய்துவிட்டு கட் செய்து விடுகிறார் முத்து.
இதனால் மீண்டும் விஜயா கால் செய்ய இருவரும் பேசிக்கொள்கின்றனர். அவர் விஜயாவிடம் உனக்கு என் ஞாபகம் இருக்கா எனக் கேட்க உங்கள தான் நினைச்சுட்டு இருக்கேன் என்கிறார். எனக்கு பிடிக்காதவங்க வீட்ல நீங்க தங்கி இருக்கீங்க என மீண்டும் அண்ணாமலையை குற்றம் சொல்கிறார்.
அவரோ நீயும் அதைத்தான் செய்திருக்க, இன்றுவரை அந்த வாசுதேவன் நம்ம வீட்டுக்கே வந்தது இல்ல. அங்க தான் நீ தங்கி இருக்க என கூறுகிறார். இருவரும் பேசிவிட்டு ஃபோனை வைக்க இது முத்து வேலை தான் என தெரிந்து அவரை கூப்பிட்டு கண்டித்து விடுகிறார்.
ஏற்கனவே டிஆர்பி படுத்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது முத்து மற்றும் மீனா இருவரும் இங்கிலீஷ் கற்றுக்கொள்ள கோர்ஸ் சென்று இருக்கின்றனர். தேவையில்லாத கதைகளத்தால் எபிசோடை ஓட்டுவதை எப்பொழுது தான் இந்த இயக்குனர் விடப் போகிறாரோ என ரசிகர்கள் கலைத்து வருகின்றனர்.
