Siragadikka Aasai: கிரிஷை வெளியேற்ற ரோகிணி போட்ட திட்டம்… ஆப்பு சூப்பரா ரெடி ஆகுதே!
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.
கிரிஷ் மனோஜ் மற்றும் ரோகிணி கையை பிடித்துக்கொண்டு தான் எங்கேயும் போகமாட்டேன். இங்குதான் இருப்பேன் என அழுது கொண்டே கூறுகிறார். மனோஜ் அவரை முறைக்க முத்து ரெண்டு பேரு தான் உனக்கு சப்போர்ட் இல்ல எனக் கூற ரவியை பார்க்கிறார்.
ரவி கை தூக்காமல் இருப்பதை பார்த்து எனக்கு நேத்து நீ சப்போர்ட் செய்றேன்னு சொன்னேன்ல என்ன கேட்கிறார் மனோஜ். இதற்கு கடுப்பாகும் ரவி நான் எப்ப சொன்னேன். நீ நானா வந்த நீனா பேசுனா ஒரு முடிவோட கிளம்பிட்ட என்கிறார்.
ஸ்ருதி கிரிஷை அப்படியே போனு விட்டுட முடியாதே என அவர் வீட்டில் இருக்க இருவரும் சப்போர்ட் செய்கின்றனர். முத்து இதை வேற செஞ்சிருக்கியா. சரி போ ரெண்ட விட அஞ்சு தான பெருசு அதனால கிருஷ் இங்கதான் இருப்பான் எனக் கூற அண்ணாமலை உள்பட நால்வரும் சந்தோஷப்படுகின்றனர்.
ஆனால் ரோகிணி பதட்டத்தில் இருக்கிறார். அடுத்த நாள் முத்து ரோகிணியின் அம்மா புகைப்படத்தை வைத்து தேடிக் கொண்டிருக்க ஒரு ஆட்டோ டிரைவர் அவரை கோயிலில் இறக்கி விட்டதாக கூறுகிறார். உடனே முத்து அதை மீனாவிற்கு கால் செய்து சொல்லி கோவிலில் விசாரிக்க செல்கிறார்.
கிரிஷ் ஸ்கூலில் இருக்க அங்கு வரும் ரோகிணி அவரிடம் நீ கொஞ்ச நாளைக்கு தனியா தான் இருக்கணும் எனக் கூறுகிறார். நான் வீட்டில் தான் இருப்பேன் என அடம் பிடிக்க அதெல்லாம் உனக்கு புரியாது எனக் கூற இப்போ சொல்லு எனக்கு புரியும் என்கிறார்.
ஆனால் ரோகிணி அவரை அழைத்துக்கொண்டு பிரின்சிபல் ரூமுக்கு சென்று தான் அவர் அம்மா என அறிமுகம் செய்துக்கொண்டு கிரிஷ் பாட்டிக்கு உடம்பு முடியலை வீட்டில் வைத்து பார்க்க போவதாக அவன் டிசி வேண்டும் எனக் கேட்க கிரிஷ் அதிர்ச்சி அடைகிறார்.
அவர்கள் கொஞ்ச நேரம் வெயிட் செய்ய சொல்ல கிரிஷ் தான் இந்த பள்ளியில் தான் படிப்பேன் என்கிறார். ஆனால் ரோகிணி அடம் பிடிக்காதே எனத் திட்டிவிட்டு டிசியை வாங்கிக்கொண்டு கிரிஷை தரதரவென ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு செல்கிறார்.
இதை தூரத்தில் இருந்து ரோகிணியின் அம்மா பார்த்து இவனை எங்க அழைச்சிட்டு போறாளுனு தெரியலையே என பதறுகிறார். கோயிலுக்கு வரும் மீனா மற்றும் சத்யா, ரோகிணியின் அம்மா புகைப்படத்தை வைத்து ஐயரிடம் விசாரித்து கொண்டு இருக்கின்றனர்.
கிரிஷை வித்யா வீட்டுக்கு அழைத்து வரும் ரோகிணி வீட்டில் நடந்ததை சொல்கிறார். உங்க அம்மா உன்கூட இருக்கதானே வீட்டு போயிட்டாங்க. வீட்டில் உண்மையை சொல்லு. முதலில் பிரச்னை இருக்கும். அப்புறம் ஏத்துப்பாங்க என்கிறார். சொல்ல ஈசியா இருக்கும். இவன் அங்க இருக்கது நல்லது இல்ல.
இந்த ஒரு வாரம் இங்க இருக்கட்டும் எனக் கூற ரோகிணி பிளீஸ் வித்யா என்மேல உள்ள கோபத்தில் சொல்லாதே. இப்போ எனக்கு வேற வழியே இல்லை. ஒரு வாரம் மட்டும். அப்புறம் வந்து நான் கூட்டிட்டு போயிடுறேன் எனக் கேட்க அவரும் ஒப்புக்கொள்கிறார்.
