Siragadikka Aasai: மீனா வீட்டுக்கு வந்த விஜயா… மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்க!
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த சுவாரஸ்ய தொகுப்புகள்.
மனோஜ் கடையில் உட்கார்ந்து கொண்டு ஓவர் சீன் போடுகிறார் விஜயா. மனோஜிடம் நீயும் என்னை போக சொல்றீயா எனக் கேட்க இல்லம்மா இங்க உனக்கு சுடு தண்ணி கூட என்னால் வச்சு தர முடியாது. அட்ஜெஸ்ட் பண்ணிட்டு மீனா வீட்டில் இரு என்கிறார்.
இதனால் எதுவும் செய்ய முடியாமல் முத்து, மீனாவுடன் கிளம்பி செல்கிறார். அங்கு மீனா வீட்டு வரும் போதே முகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு சீன் போடுகிறார். இந்திரா உங்களுக்கு எல்லாம் செய்து தருவோம் என்கிறார்.
விஜயா அப்போதும் சீன் போடுவது போல நான் பிடிக்கலைனா கிளம்பி விடுவேன் என்கிறார். பின்னர் ஸ்ருதி, ரவி வந்து மன்னிப்பு கேட்க பரவாயில்ல நீங்க என்ன செய்வீங்க? உங்க அம்மா செஞ்சது தானே எனக் கூறிவிடுகிறார்.
அண்ணாமலை என்ன நடந்தது எனக் கேட்க அங்கு நடந்த விஷயங்களை முத்து சொல்கிறார். பின்னர் மீனா, முத்து இங்கிலீஷ் கிளாஸ் செல்கின்றனர். அங்கு வச்சிருக்கார் டைரக்டர் ஒரு ட்விஸ்ட்டை. அதாவது முத்து தன்னுடைய கடன் பற்றி கிளாஸில் பேசுகிறார்.
அங்கு முத்துவிடம் பேசும் ஒருவர் ஏன் கடன் பத்தியே பேசுறீங்க என்னாச்சு எனக் கேட்க தனக்கு நடந்ததை கூறுகிறார். எப்படியும் அந்த பைனான்சியரிடம் கருப்பு பணம் இருக்கும். நான் வருமான வரித்துறை அதிகாரி. இதை சரி செய்கிறேன் எனக் கூறிவிடுகிறார்.
இனிமேல் விஜயா வீட்டை முத்து பெற்று கொடுப்பார். ஆனால் இந்த அதிகாரியால் சிந்தாமணி இதற்கும் ரோகிணியை செய்ய வைத்து அவரை வீட்டுக்குள் அழைத்து செல்லவும் வாய்ப்பு இருக்கு. என்னமோ அடுத்த சில எபிசோட்கள் பரபரப்பாக இருக்க வாய்ப்பு இருக்கலாம்.
