Siragadikka Aasai: மனோஜுக்கு ரெடியான அடுத்த ஜோடி! காணாமல் போன ரோகிணி என்னப்பா?

 
Siragadikka Aasai: மனோஜுக்கு ரெடியான அடுத்த ஜோடி! காணாமல் போன ரோகிணி என்னப்பா?

Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை தொடரில் கடந்த சில எபிசோடுகளாக ரோகிணி மற்றும் மனோஜ் இருப்பவருக்கான விவாகரத்து வழக்கு தொடர்பான கதைக்களமே நகர்ந்து கொண்டு வந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் செய்திருக்கிறது சீரியல் குழு.

சிறகடிக்க ஆசை சீரியல் தொடங்கியதிலிருந்து ரோகினி சொன்ன பொய்களை மாட்டி விட வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கூறிக் கொண்டு வந்தனர். ஆனால் இது பெரிய அளவில் இழுவை கொடுத்து சில மாதங்கள் முன்னர் தான் அந்த கதை உடைந்தது.

டிஆர்பியில் முதலிடத்திலிருந்த சீரியல் இந்த பிரச்சினையால் ஐந்தாவது இடம் கூட பிடிக்க முடியாமல் தத்தளித்து வருகிறது. இதனால் ரோகிணியை மாட்டிவிட்டு மீண்டும் முதலிடத்தை பிடிக்கலாம் என இயக்குனர் முடிவெடுத்து கதைக்களத்தை மாற்றி இருந்தார்.

இருந்தும், சிறகடிக்க ஆசை தொடர்ந்து தத்தளித்து தான் வருகிறது. அந்த வகையில் தற்போது மனோஜை தன்னிடம் வைத்துக் கொள்ள ரோகிணியும் அவரிடம் இருந்து விடுபட மனோஜூம் விவாகரத்து வழக்கில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு பக்கம் மனோஜ் இருக்கு பெண்பார்க்கும் படலம் பரபரப்பாக நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் சிந்தாமணி மற்றும் மீனாவுக்கு இடையேயான தேர்தல் காட்சிகளும் வைக்கப்பட்டு அதுவும் இன்னொரு கதைகளத்தில் நகர்ந்து கொண்டு வருகிறது.

இந்நிலையில் மனோஜ்க்கு தற்போது அமெரிக்கா பெண் ஒருவரை பார்த்து முடிவு செய்துள்ளனர். குடும்பமாக வீடியோ கால் பேசி பெண்ணையும் ஓகே செய்து நிச்சயதார்த்தத்தையும் விரைவில் முடிக்க விஜயா திட்டமிட்டு விட்டார்.

ஆனால் இதுவரை ரோகிணி கொடுத்த எந்த காட்சிகளும் காட்டப்படாததால் மனோஜ்க்கு இந்த கல்யாணம் நடந்து விடுமோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஆனாலும் ரோகிணி இதை விட மாட்டார் விட்டு பிடிக்க இ ருப்பாரோ என்ற எண்ணமும் ரசிகர்களிடம் இருக்கிறது.

விட்ட இடத்தைப் பிடிக்க சீரியல் குழு தொடர்ச்சியாக கதைக்களங்களில் பல மாற்றங்களை செய்து வருகிறது. இதுவாவது மீண்டும் டிஆர்பியில் நல்ல இடம் பிடித்துக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

From Around the web