Categories: latest news television

Siragadikka Aasai: ஒருமுறை விஜயா கையால் சாப்பிட்டதுக்கே முத்து இப்படி சந்தோஷப்படுறாரே? அம்மா பாசம் மலருமா?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.

விஜயா தன்னுடைய பெயரில் அன்னதானம் செய்து கொண்டிருக்க அங்கு வந்து முத்துவும் சாப்பிட அமருகிறார். விஜயா வைத்துக்கொண்டு வர முத்துவை பார்த்ததும் நின்று விடுகிறார். வீட்ல தான் உங்க கையில சாப்பிட்ட மாதிரியும் ஞாபகமே இல்லை. சின்ன வயசுலையே பாட்டி வீட்டுக்கு அனுப்பிட்டீங்க. இங்கேயாது உங்க கைல சாப்பிடுகிறேன். வைங்கம்மா என்கிறார்.

விஜயாவும் அவருக்கு பரிமாறிவிடுகிறார். அப்போ அவசர அவசரமாக முத்து சாப்பிட புரை ஏறுகிறது. விஜயா அவருக்கு தடை தட்ட போக உடனே நின்று விடுகிறார். முத்து நன்றாக சாப்பிட்டுவிட்டு பார்வதியிடம் சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சு அத்தை. அதிலும் அம்மா பரிமாறி சாப்பிட்டது ரொம்ப சந்தோஷம் என கூறிவிட்டு செல்கிறார்.

பார்வதி விஜயாவிடம் உன் கையளவு சாப்பிட்டது முத்துவுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு பாரு. நான் பேசினதை கேட்டு எனக்கு கண்ணுல கண்ணீர் வந்துட்டு என பேசுகிறார். விஜயாவோ நீ அதை வீடியோவாக எடுத்தியா என கேட்கிறார். சரியா எடுத்துட்டேன் என பார்வதி கூற அதை டெலிட் செய்து விடு.

பெத்த புள்ளைய அன்னதானத்தில் உட்கார வைத்து சாப்பாடு போட்டா அதை பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க எனக் கேட்கிறார். பார்வதி அட்லீஸ்ட் அவன் பையனாவது சொன்னியே என கூறிவிட்டு செல்கிறார். வீட்டில் கிரிஷ் மற்றும் அண்ணாமலை இருவரும் செஸ் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

siragadikka aasai

அப்பொழுது வரும் ரவி அண்ணாமலைக்கு ஐடியா கூற அவர் அது போலவே செய்து கிரிஷிடம் தோற்றுவிடுகிறார். அண்ணாமலை ரவியை முறைக்க ஸ்ருதியும் கலாய்க்கிறார். அந்த நேரத்தில் அங்கு வீட்டிற்கு வரும் முத்து அண்ணாமலையிடம் இன்னைக்கு ஒரு பெரிய சந்தோஷமான விஷயம் நடந்துச்சு எனக் கூறுகிறார்.

மனோஜ் அங்கு வரும்போது காரில் வந்த யாராவது ஏதாவது பொருளை விட்டுட்டு போயிட்டாங்களா என நக்கலாக கேட்கிறார். உடனே மீனா என்னுடைய வீட்டுக்காரர் அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்பட மாட்டார். அது அப்படியே எடுத்துக் கொண்டு போய் கொடுத்துட்டுதான் வருவாரு என்கிறார்.

வீட்டிலிருந்த எல்லோரும் ஆளாளுக்கு ஒரு விஷயத்தை சொல்ல முத்து அது இல்லை என கூறிவிடுகிறார். கடைசியில் தான் விஜயா கையில் சாப்பிட்டதை கூட எல்லோரும் ஆச்சரியமாக விஜயாவை திரும்பி பார்க்கின்றனர். அவர் நான் வைத்த அன்னதானத்தில் வந்து சாப்பிட்டதாக கூறி விடுகிறார்.

உடனே மனோஜ் இதுதான் விஷயமா என நக்கலாக பேச நீ டெய்லி அம்மா கைது சாப்பிடுற நான் அப்படி இல்லை எனக் கூறி விடுகிறார் முத்து. திரும்பவும் மனோஜ் பேச வர நானே சந்தோஷத்தில் பேசிக் கொண்டிருக்கிறேன். நீ எதுவும் பேசாத அடி வாங்கிடுவ என சிரித்துக் கொண்டே வருகிறார்.

பின்னர் முத்து அண்ணாமலையிடம் விஜயா கையில் சாப்பிட்டதை குறித்து ரொம்ப சந்தோஷமாக பேசுகிறார். இந்த சந்தோஷத்தில் நினைக்க ரொம்பவே மகிழ்ச்சியா இருக்குப்பா என முத்து கூற மீனா கண்கலங்கி அவரை பார்த்துக்கொண்டு இருக்கிறார். அண்ணாமலையும் மகனை ஆசையாக பார்க்கிறார். 

மறுநாள் கிரிஷை அழைத்துக் கொண்டு முத்து மற்றும் மீனா அவருடைய பாட்டியை காண செல்கின்றனர். நாளை அவரை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் எனக் கூறுவிடுகிறார் டாக்டர். முத்து மற்றும் மீனா, கிரிஷை விட்டுவிட்டு வெளியில் செல்ல நம்ம ஊருக்கு போயிடலாம் என்கிறார் அவர் பாட்டி.

ஆனால் கிரிஷ் எனக்கு இங்கே இருக்க தான் பிடிக்குது. பாட்டி, தாத்தா, ஆண்ட்டிலாம் என்னை நல்லா பாத்துக்கிறாங்க என்கிறார். அவர் பேசுவதை கண்கலங்க பார்க்கிறார் பாட்டி. முத்து, மீனா வந்து டாக்டர் உங்க கூட யாரும் இருக்க சொல்லி இருக்காங்க. நாளைக்கு எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போவதாக சொல்லி செல்கிறார் முத்து. 

இதை வாசலில் நின்று கேட்கும் ரோகிணி அவர் அம்மாவை திட்டுகிறார். அவர் கிரிஷின் ஆசையை கூறி உண்மையை நீயே வந்து வீட்டில் சொல்லிடு எனவும் அவர் ரோகிணியிடம் கேட்டு கொண்டு இருக்கிறார்.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily