1. Home
  2. Latest News

Siragadikka Aasai: மனோஜ் திமிரால் எழுந்த பணப்பிரச்னை… முத்து, மீனாவிடம் சிக்கும் ரோகிணி!

Siragadikka Aasai: மனோஜ் திமிரால் எழுந்த பணப்பிரச்னை… முத்து, மீனாவிடம் சிக்கும் ரோகிணி!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள். 

சிந்தாமணி பார்வதி வீட்டுக்கு வருகிறார். டான்ஸ் கிளாஸ் மூடி விட்டதால் அடுத்து யோகா கிளாஸ் ஆரம்பிக்கலாம் என பேசி கொள்கின்றனர். விஜயா தன்னுடைய கடைசி மருமகளை வைத்து போட்டோ எடுத்து தருவதாக சொல்ல சிந்தாமணி போஸ்டர் வேலையை தான் பார்த்து கொள்வதாக சொல்கிறார்.

முத்து ஷெட்டில் நண்பர்களுடன் இருக்கிறார். செல்வம் தன்னுடைய சொந்தக்காரர் பாரீனில் இருந்து வந்து இருப்பதாக அவருடன் வெளியில் செல்வதாக சொல்லி கிளம்புகிறார். பின்னர் சத்யாவையும் பாரீன் அனுப்ப நண்பர்கள் சொல்ல அதெல்லாம் வேண்டாம் என்கிறார் முத்து. 

பின்னர் அங்கு மீனா தன்னுடன் பூக்கட்டும் பெண்களுடன் வர என்ன விஷயம் எனக் கேட்கிறார் முத்து. ஒரு பிரச்னை எனக் கூறி மனோஜ் ஷோரூமில் சீட்டு கட்டி இருக்கிறார்கள். இப்போ திடீரென இவங்க பையனுக்கு அடிப்பட்டுடுச்சு. அதற்கு சீட்டை கேன்சல் செய்து கேட்டால் ஓவரா பேசி இருக்காங்க. 

அதிலும் அந்த கடையில் வேலை செஞ்சவர் ஓவரா பேசியதையும் சொல்ல முத்து கோபமாகி அவர்களுடன் மனோஜ் ஷோரூமிற்கு அழைத்து செல்கிறார். வீட்டில் விஜயா யோகா டிரெஸை போட்டுக்கொண்டு ஸ்ருதியை அழைத்து போட்டோ எடுக்க சொல்கிறார். விதவிதமாக போஸ் கொடுக்க அதை அண்ணாமலை சிரித்துக்கொண்டே பார்த்துக்கொண்டு இருக்கிறார். அப்போ ரவி வர என்ன அம்மா சாமியாரா மாறிட்டாங்களா எனக் கேட்க விஜயா கடுப்பாகிறார். 

Siragadikka Aasai: மனோஜ் திமிரால் எழுந்த பணப்பிரச்னை… முத்து, மீனாவிடம் சிக்கும் ரோகிணி!
#image_title

ஷோரூமிற்கு வரும் முத்து, ராஜாவை இழுத்து அடிக்க போக மனோஜ், ரோகிணி வந்த என்ன ரவுடித்தனம் செஞ்சிட்டு இருக்கீங்க எனக் கேட்கிறார்கள். இவங்க ரெண்டு பேரும் உங்க கடையில் சீட்டு கட்டுறாங்க. இப்போ ஒரு அவசரம் பணத்தை கேட்டா இவன் அசிங்கமா பேசி இருக்கான் என்கிறார். 

அவன் சொன்னதுல என்ன தப்பு? சீட்டு முடிஞ்சா தான் பொருளை தர முடியும். கம்பெனி பாலிசி என்கிறார். முத்து கடுப்பாகி அப்பா காசுல தானே கடையை ஆரம்பிச்ச அப்பாக்கிட்ட சொல்லவா எனக் கேட்க மனோஜ் பெருமூச்சு விட்டு இப்போ என்ன காசு வேண்டும் அதானே எனக் கூறி பணத்தை எடுக்க செல்கிறார். 

ரோகிணி பின்னால் சென்று பார்க்க கல்லாவில் கம்மியாக பணம் இருக்கிறது. ரோகிணியிடம் லாக்கரில் இருக்கும் பணத்தை எடுக்க சொல்ல ஆனால் அவர் வேண்டாம். நான் சமாளிச்சிக்கிறேன் வா என அந்த பெண்களிடம் சென்று நாளைக்கு வாங்க என்கிறார். 

மீனா அவங்களே அவசரம்னு கேக்கிறாங்க. என்ன மாத்தி மாத்தி பேசுறீங்க எனக் கடுப்படிக்கிறார். மனோஜ் லாக்கரில் சென்று திறந்து பார்க்க அங்கு பணம் இல்லாமல் இருக்க அதிர்ச்சி அடைகிறார். ரோகிணியிடம் சொல்ல அவர் தன்னுடைய தப்பை மறைக்க அங்கு வேலை செய்யும் ராஜா, ராணி மீது அந்த பழியை போடுகிறார். 

மனோஜும் யோசிக்காமல் அவர்கள் மேல் பழியை போட அவர்களோ நாங்கள் இல்லை என்கின்றனர். சிசிடிவி கேமராவும் கட் செய்யப்பட்டு இருக்க மனோஜ் உங்களுக்கு ஒரு வாரம் டைம் அதற்குள் காசு வரணும் என்கிறார். முத்து போலீஸில் புகார் கொடுக்கலாம் என போனை எடுக்க ரோகிணி இப்போதான் ஷோரூம் பிக்கப் ஆகி இருக்க இது தெரிஞ்சா இன்னும் பிரச்னை ஆகும் என முத்து நினைப்பதாக பேச மீனா கடுப்பாகி முத்துவிடம் வேண்டாம் என்கிறார். 

பின்னர் அந்த பெண்களின் காசை அக்கவுண்டில் அனுப்ப அவர்கள் வாங்கி கொண்டு செல்கின்றனர். முத்து அப்பா காசில் பணத்தை திருடிதானே ஷோரூம் ஆரம்பிச்ச அதான் கர்மா உன்னை சுத்தி சுத்தி அடிக்கிது. வீட்டுக்கு வா வச்சிக்கிறேன் என திட்டிவிட்டு செல்கிறார். 

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.