Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மீனாவை போட்டு படுத்திக்கொண்டு இருக்கிறார் விஜயா. அங்கையும் இங்கையும் ஓடிக்கொண்டு இருப்பவரை பிடித்து நிறுத்துகிறார் அண்ணாமலை. உடனே விஜயா அய்யயோ இப்போ தான் யோசிச்சேன் ரோகினி மாமாக்கு எந்த ரூமை கொடுக்கிறது என்கிறார்.
மனோஜ் இன்னொரு ரூமை கைக்காட்டி அந்த ரூமை தரலாம் என்கிறார். ஆனால் ரவி, ஸ்ருதி நாங்க அங்க தானே தங்கி இருக்கோம். விட்டா எங்களை வெளியில் அனுப்பிடுவ போலருக்கே எனக் கூறுகிறார். உடனே முத்து இங்க வந்தும் இதையே பேசிட்டு இருக்கானுங்க. பாட்டி விட்டா உன்னையே வெளியில் அனுப்பிடுவான்களே எனவும் கலாய்க்கிறார். சும்மா இரு என விஜயா அவர் வாயை அடைக்கிறார்.
இதையும் படிங்க: ரஜினியோட மோதுறேனா!.. அடபோங்கய்யா.. ஒரே ஓட்டம் எடுத்த ஜெயம் ரவி.. சைரன் ரிலீஸ் எப்போ தெரியுமா?..
ஒருவழியா ரோகினி நாங்க வெளியில் படுத்துக்கிறோம். அவர் ரூமில் படுத்துக்குவார் எனச் சொல்லி விடுகிறார். மனோஜ் பேச வர பிரச்னை இல்லை. நாம் ஹாலில் படுத்துக்கலாம் என்கிறார். அதற்குள் மாமா கார் வந்துவிடுகிறது. விஜயா பரபரப்பாக அவரிடம் போகிறார். பிரவுன் மணி பில்டப்புடன் இறங்கி வருகிறார். அவருக்கு மூன்று மருமகள்களை வைத்து ஆரத்தி எடுத்து அழைத்து வருகிறார்.
ஹாலில் உட்கார அண்ணாமலை அப்பா வந்து இருந்தா சந்தோஷப்பட்டு இருப்போம் எனக் கூற அவர் சின்ன வயசிலையே போய்ட்டாரு எனக் கூற அனைவரும் ஷாக் ஆகின்றனர். இதில் கடுப்பாகும் ரோகினி அங்கிள் எங்க அப்பாவை சொல்றாரு. உடனே அவருக்கு வேலை மலேசியாவில் ரொம்ப பிஸி. ஓடிட்டே இருக்காரு என்கிறார். அவர் மாப்பிள்ளைக்கும், பொண்ணுக்கும் டிரெஸ் எடுத்து கொடுத்தாரு.
இதையும் படிங்க: ரம்யா கிருஷ்ணன் திருமண உறவு குறித்த ரகசியத்தை போட்டு உடைத்த பயில்வான் ரங்கநாதன்!.. செம மேட்டர்!..
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…