Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரவியை வீட்டுக்கு அழைத்து வரலாம் என மீனா சொல்லும் போது அண்ணாமலை மனம் இறங்குகிறார். இதையடுத்து முத்து அவங்க வேண்டாம்பா. அந்த வாசுதேவன் சொத்துனு சொன்னது உண்மையாகிடும் அப்பா என்கிறார்.
இதை கேட்ட விஜயா முத்து உளறுறான் என்கிறார். உடனே அண்ணாமலை முத்து சொல்றது தான் சரி என்கிறார். அவங்களை வீட்டுக்குள்ள விட்ட சொத்துக்கு பழக விட்டது உண்மையாகிடும்ல என்கிறார். ஆனால் மீனா உங்க மூத்த பையன் போனப்ப இவரை கல்யாணம் பண்ணி வச்சீங்க.
இதையும் படிங்க:சிவாஜிக்கு மட்டும் தரீங்க… எனக்கும் வேணும்.. எம்.ஜி.ஆரிடம் அடம் பிடித்து வாங்கிய நம்பியார்..!
உங்களை எல்லாரும் பெருமையா தான் நினைச்சாங்க என்கிறார். இதையடுத்து அண்ணாமலை நீ சொல்றது புரியுதும்மா. ஆனா என் மனசுக்கு ஒத்துக்கலை. அவன் போனவன் போனவனாவே இருக்கட்டும் என்கிறார். இதையடுத்து அண்ணாமலை கிளம்பிவிட பார்வதி, விஜயாவிடம் ரவியை அழைத்து வருவது கஷ்டம் தான் என்கிறார்.
இதையடுத்து ஹோட்டலில் ஸ்ருதியும் ரவியும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். குடும்ப ஆசையில் ரவி பேச நம்ம இருக்கது தான் வீடு. நம்ம வேண்டாம்னு நினைக்கிறவங்க நமக்கும் வேண்டாம் என்கிறார். உனக்கு ஆசை இருந்தா தனியா போய் பார்த்து விட்டு வா எனக் கறாராக சொல்லி விடுகிறார்.
இதையும் படிங்க:வீட்டை விட்டு வெளியே துரத்திய உறவினர்!.. நடுத்தெருவில் நின்ற ஜெயலலிதா.. காப்பாற்றிய நடிகர்…
அடுத்ததாக ரோகினியும், வித்யாவும் பார்க்கிற்கு விசித்ரனை சந்திக்க செல்கின்றனர். ரோகினி புலம்பி கொண்டே அவரை பார்த்து காசை கொடுத்து இனி எனக்கு அழைக்காதே என்கிறார். அது எப்படி தேவைப்படும் போது கால் செய்வேன் எனக் கூறி விட்டு செல்கிறார். இதை தொடர்ந்து பார்க்கில் மனோஜை பார்த்து விடுகிறார் ரோகினி.
ஆனால் கூட இருப்பவரை தன் க்ளையண்ட் எனக் கூறி அவருக்கு சாப்பிடவில்லை என்றால் உடம்பு மோசமாகிவிடும் எனப் பொய் சொல்லி சமாளித்து விடுகிறார். இதையடுத்து விஜயாவை சாப்பிட கூப்பிட அவர் விடாப்பிடியாக ரூமில் உட்கார்த்து கொள்கிறார். கூப்பிட போன மீனாவையும் திட்டு அனுப்பி விட அவர் வெளியில் வருவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.
TVK Vijay:…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…