மீண்டும் ஜோடி போட்ட மனோஜ், ரோகிணி…! விஜயாவுக்கு இனி என்ன நடக்குமோ?
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடந்த எபிசோட் குறித்த தொகுப்புகள்.
மனோஜ் ஷோரூமிலும், விஜயா ஸ்ருதி வீட்டிலும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றனர். எலி அதிகமாக இருப்பதாக மனோஜ் புலம்ப அதற்கு தான் சரி செய்வதாக ரோகிணி சொல்ல அங்கு வந்து தங்க சொல்கிறார். மனோஜை தன் பக்கம் ஈர்க்க அவரும் சரி தான் என்கிறார்.
மனோஜ் ஷோரூமுக்கு வரும் ரோகிணி ஒரு பூனையை கொண்டு வந்து விடுகிறார். பின்னர் இருவரும் ரொமாண்டிக்காக பேசிக்கொண்டு இருக்கின்றனர். அம்மாவும், அப்பாவும் பிரிந்து இருப்பது கஷ்டமாக உள்ளதாக மனோஜ் சொல்ல எனக்கும் உன்னை பிரிந்து இருந்தது கஷ்டம் என்கிறார் ரோகிணி.
அப்படியே ரோகிணி பேச்சில் மனோஜை தன் பக்கம் ஈர்த்து விடுகிறார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வரும் முத்து அண்ணாமலை மற்றும் மீனா அம்மாவுடன் ஜாலியாக அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றார். அவர்கள் இங்கிலீஷ் கிளாஸ் போன கதையை சொல்லி சிரித்து கொண்டு இருக்கிறார்.
சத்யா மாடியில் கவலையாக இருக்க என்னவென்று விசாரிக்கிறார். அவர் ரேகா ஹைதராபாத்தில் இருப்பது சந்தேகமாக இருப்பதாக சொல்ல எதையும் பார்த்து கொள்ளலாம் என்கிறார். இன்னொரு பக்கம் விஜயா நிலைமை தான் படுமோசமாகி விட்டது.
ஸ்ருதி வீட்டில் சரக்கு பார்ட்டி நடக்க எல்லா பெருசுகளும் குடித்துவிட்டு கூத்தடித்து கொண்டு இருக்க விஜயாவிற்கு அங்கு இருக்கவே கடுப்பாகிறது. ஒருவர் விஜயாவை பார்த்து ஜொள்ளுவிட அவர் விஜயாவின் அருகில் வந்து டான்ஸ் ஆடுகிறார்.
ஸ்ருதியின் அம்மா விஜயாவை ஆடச்சொல்ல அவர் கடுப்படிக்கிறார். மீண்டும் மீண்டும் சொல்ல சத்தமாக கத்தும் விஜயா அங்கிருந்து தன் ரூமுக்கு சென்று விடுகிறார். ஆனால் நேர் மாறாக ரூமில் உக்கார்ந்து அழுதுக்கொண்டு இருக்கிறார். இவர் அடுத்து மனோஜ் ஷோரூமுக்கு செல்ல இருப்பதால் ஆட்டம் சூடு பிடிக்கும்.
