Siragadikka Aasai: விஜயாவின் திமிருக்கு விழுந்த சரியான அடி!... இப்பவாது மீனாவோட அரும புரிதா?
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் அடுத்த கட்டமாக அண்ணாமலை குடும்பமே வீட்டை பூட்டி விட்டு வெளியேறி இருக்கும் நிலையில் அடுத்த கட்டம் என்ன நடக்குமோ என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அந்த வகையில் மீனா வீட்டுக்கு சென்று விட்டார் அண்ணாமலை. ரவியுடன் ஸ்ருதி வீட்டுக்கு சென்று விட்டார் விஜயா. அங்கு அவருடைய திமிர் பிடுங்கப்பட்டு அமைதியாக இருக்கிறார். சாப்பாட்டுக்கு கூட மட்ட அரிசியை வைக்க அதற்கும் முகம் சுழிக்கிறார்.
அது தனக்கு ஒத்துக்காது என அவர் அடம் பிடித்தாலும் இப்போ சாப்பிடுங்க. செட்டாகிடும் என ஸ்ருதியின் அம்மா கடுப்படிக்க விஜயா எதுவுமே சொல்ல முடியாமல் அமைதியாக சாப்பிட பார்க்கிறார். ஆனால் இதற்கு நேர் மாறாக அண்ணாமலைக்கு ராஜ உபசரிப்பு கொடுத்து கொண்டு இருக்கின்றனர்.
சீதா சமைத்து எடுத்து வந்து அண்ணாமலைக்கு கொடுக்க அவர் ஒன்னுமே இல்லை என நினைத்து வந்தேன். ஆனால் இங்கு என்னை பார்த்து கொள்ள இத்தனை பேர் இருக்கின்றனர் என சந்தோசமாக பேசுகிறார். மனோஜுக்கு ஷோரூமில் தூங்க முடியாமல் அவதிப்படுகிறார்.
சிந்தாமணி தற்போது ரோகிணியை அழைத்து இந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ள சொல்கிறார். இதனால் மனோஜ் ரோகிணிய்யுடன் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இனிமேல் சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
