1. Home
  2. Latest News

Siragadikka Aasai: நீங்க உருட்டுற மொத்தமும் தேவையில்லாத ஆணிதான்! மறுபடியும் ஸ்கெட்ச் போட்ட ரோகிணி!

Siragadikka Aasai: நீங்க உருட்டுற மொத்தமும் தேவையில்லாத ஆணிதான்! மறுபடியும் ஸ்கெட்ச் போட்ட ரோகிணி!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் டாப் முதலிடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் எபிசோடுகளுக்கான வாரப் புரோமோ வெளியாகி இருக்கிறது.

விஜய் தொலைக்காட்சியில் நம்பர் ஒன் தொடராக இருக்கிறது  சிறகடிக்க ஆசை. இத்தொடரில் இன்னும் நிறைய முடிக்கப்படாத கதைக்களம் இருப்பதால் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியின் மீது முதலில் ஆர்வமாக இருந்தனர்.

ஆனால் எபிசோடை வளர்க்க தொடர்ந்து இயக்குனர் கதையை இழுத்துக் கொண்டே போகுது தற்போது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் காரணமாகவே கடந்த சில வாரங்களாக இந்த நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் ரசிகர்களிடம் ஆதரவு இல்லை.

அதிலும் நெகட்டிவ் ரோலில் இருக்கும் ரோகிணிக்கு ஆதரவாக கதைகளும் நகர்ந்து வருகிறது. அந்த வகையில் அவரின் மகன் கிரிஷ் கடந்த வாரம் அவர் படித்து வந்த பள்ளியில் இருந்து வெளியேறினார். எதிர்பார்த்தது போலவே முத்துமீனா காரில் வந்து தற்போது அவரிடம் அடைக்கலம் புகுந்து விட்டார்.

இதன் மூலமாக அவர் ரோகிணி பற்றிய இந்த தகவலாவது அவர்களிடம் சொல்லுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் மூலம் பயந்து போய் இருக்கும் கிரிஷை மனநல மருத்துவரிடம் காட்ட முத்து மற்றும் மீனா இருவரும் திட்டமிட்டு சீதா வேலை செய்யும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல இருக்கின்றனர்.

Siragadikka Aasai: நீங்க உருட்டுற மொத்தமும் தேவையில்லாத ஆணிதான்! மறுபடியும் ஸ்கெட்ச் போட்ட ரோகிணி!
siragadikka aasai

இதை வீட்டில் அவர்கள் பேசிக்கொண்டதை ஓட்டு கேட்ட ரோகிணி அதே நேரத்தில் தானும் மருத்துவமனைக்கு செல்கிறார். முத்து மற்றும் மீனா மருத்துவரை பார்க்க உள்ளே சென்று இருந்த சமயத்தில் கிரிஷிடம் அந்த டாக்டர் என்னை பற்றி எந்த தகவலும் கேட்டால் நீ சொல்லக்கூடாது என சொல்லிவிட்டு செல்கிறார்.

இதன் மூலம் தன் அம்மாவின் பேச்சைதான் கிரிஷ் கேட்பார் என்பதால் இந்த வழியிலும் ரோகிணி பற்றிய எந்த தகவலும் வெளியாகாது என்று நம்பப்படுகிறது. ஆனால் தொடர்ந்து ஒரு சின்ன குழந்தையை வைத்து இப்படி ஒரு கதைக்களம் ரசிகர்களிடம் சிறகடிக்க ஆசைக்கும் நெகட்டிவ் விமர்சனங்களை குறித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.