வீட்டை விட்டு வெளியேறும் விஜயா குடும்பம்! மீனா - முத்து எடுக்க போகும் அதிரடி ட்விஸ்ட்!
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் டாப் சூப்பர்ஹிட் தொடராக இருக்கும் சிறகடிக்க ஆசை தொடரில் அடுத்த கட்ட அதிரடியாக வீட்டை விட்டு வெளியேறி இருக்கும் எபிசோட் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மனோஜ் வாங்கிய கடனை காரணம் காட்டி சிந்தாமணி தன்னுடைய பழியை தீர்க்க பைனான்சியரை வைத்து ப்ளான் போட்டு இருக்கிறார். அந்த வகையில் வீட்டை ஜப்தி செய்ய சொல்ல அதில் இருந்து தப்பிக்க முத்துவும் மீனாவும் பல இடங்களுக்கு அழைந்து விட்டு வருகின்றனர்.
ஆனால் பைனான்சியர் அவரை பார்க்காமல் அனுப்பி விடுகிறார். இதுகுறித்து வக்கீலிடம் கேட்ட போதும் அவர் நீதிமன்றம் லீவ்வில் இருக்கிறது. ரொம்ப முக்கியமான கேஸ் மட்டுமே எடுத்துப்பாங்க என அதிர்ச்சி கொடுக்க என்ன செய்வது எனத் தெரியாமல் வீட்டுக்கு வருகின்றனர்.
இனிமேல் வீட்டில் இருந்தால் வீட்டை ஜப்தி செய்யும் போது தெருவில் நிற்க வேண்டும் என்பதால் எல்லாருமே கிளம்பி செல்கின்றனர். மனம் உடைந்த அண்ணாமலையை முத்து அழைத்து செல்ல விஜயாவும் வருத்தத்தில் நிற்கிறார்.
இவர்களை வெளியில் துரத்திவிட்ட நிலையில் சிந்தாமணி திட்டப்படி வீட்டை ரோகிணி மீட்டு கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் களம் சூடு பிடிக்கும். விஜயாவின் கொட்டம் அடங்கவும் செய்யலாம். இனிமே கதை எப்படி நகரும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
