Siragadikka Aasai: மீண்டும் ரோகிணிக்கு தொடங்கிய தலைவலி… ஸ்ருதிக்கு காத்திருந்த!
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
மீனாவின் அம்மா வீட்டில் கிரிஷை அவர் அம்மா மற்றும் சத்யா பாசமாக பார்த்து கொண்டு இருக்கின்றனர். சாப்பாடு ஊட்டிக்கொண்டு இருக்க சத்யா அவர் அம்மா குறித்து கிரிஷிடம் கேட்க அவர் முதலில் தடுமாறுகிறார். ஸ்நாக்ஸ் என்ன வாங்கிட்டு வருவாங்க எனக் கேட்கிறார் சத்யா.
லட்டு, முறுக்கு எனக் கூற பேரீச்சம் பழம் சாப்பிட்டது இல்லையா எனக் கேட்க யார் பறிச்ச பழம் என புரியாமல் குழம்புகிறார் கிரிஷ். இதில் சத்யாவிற்கு சந்தேகம் வர இருந்தும் மீனாவின் அம்மா சமாளித்து சாப்பாட்டை ஊட்டி முடிக்கிறார்.
நடுஇரவில் ரோகிணி தூங்காமல் நடந்து கொண்டு இருப்பதை மனோஜ் சந்தேகமாக எழுந்து கேட்கிறார். என்ன ஆச்சு எனக் கேட்க தூக்கம் வரலை என்கிறார். மனோஜ் நக்கலாக கேட்க அவருக்கு பதிலடி கொடுக்க சத்தம் போடுகிறார் ரோகிணி. இதனால் மனோஜ் தூங்கிவிடுகிறார்.
அடுத்த நாள் முத்து மற்றும் மீனா இருவரும் கிரிஷை ஸ்கூலுக்கு அழைத்து வந்து விடுகின்றனர். மனேஜரிடம் கிரிஷ் ரொம்ப பயந்து போய் இருக்கான். கொஞ்ச நாளைக்கு கிரிஷை நாங்க சாயந்திரம் வீட்டுக்கு அழைத்து போய்விடுவதாக சொல்கிறார். மனேஜரும் கிரிஷின் கார்டியனிடம் பேசிவிட்டு சொல்வதாக சொல்கிறார்.
முத்து மற்றும் மீனா கிளம்பிவிட ரோகிணி, மகேஸ்வரியுடன் ஸ்கூலுக்கு செல்கிறார். அங்கு மகேஸ்வரியை உள்ளே அனுப்பிவிட்டு காத்திருக்கிறார் ரோகிணி. மகேஸ்வரி மனேஜரை பார்த்து பேசிவிட்டு கிரிஷை அழைத்து கொண்டு வந்து ரோகிணியிடம் விடுகிறார்.
ரோகிணி கிரிஷிடம் கோபமாக திட்டுகிறார். நீ மகேஸ்வரி வீட்டில் தான் இருக்கணும் எனக் கூற கிரிஷ் முடியாது. நீ வந்து கூட்டிட்டு போ இல்லனா மீனா ஆண்ட்டி வீட்டில் தான் இருப்பேன் என அடம் பிடிக்கிறான். கிரிஷை அதற்குள் மேல் திட்டமுடியாமல் ரோகிணி திணறி போய் நிற்கிறார்.
ஸ்ருதி தன்னுடைய ரெஸ்டாரெண்ட் திறப்பு விழாவிற்கு நடிகை ஒருவரை பார்த்து பேசுகிறார். அவர் முதலில் பாசமாக பேசினாலும் திறப்பு விழாவிற்கு 25 லட்சம் கேட்க ஸ்ருதி ஷாக்காகி விடுகிறார். என்னுடைய பட்ஜெட்டே அவ்வளவுதான். வேண்டாம் எனக் கூறி கிளம்பிவிடுகிறார்.
மீனாவின் வீட்டில் சத்யாவுடன் மீனா பேசிக்கொண்டு இருக்கிறார். கிரிஷின் பள்ளியில் பேசிய விஷயத்தை சொல்ல சத்யாவும் அவன் இங்கையே இருக்கலாம் என்கிறார். அந்த நேரத்தில் சீதா வந்து பேசிக்கொண்டு இருக்கிறார். கிரிஷின் மனசு சரியில்லை. அதனால் ஒரு கவுன்சிலிங் கொடுக்கணும் என்கிறார்.
அதற்கு நானே ஹாஸ்பிட்டலில் அட்மிஷன் வாங்கி வைக்கிறேன் எனக் கூற மீனாவும் சம்மதம் சொல்கிறார். வீட்டில் ஸ்ருதி தன்னுடைய திறப்பு விழாவுக்கு நடிகையை அழைத்த விஷயத்தை சொல்ல மனோஜ் நான் வரட்டா எனக் கேட்கிறார். ஸ்ருதி மற்றும் முத்து மனோஜை கலாய்த்து விடுகின்றனர்.
