Siragadikka Aasai: சீதா செயினால் போலீஸில் சிக்கும் முத்து - மீனா? தேவையா இது?

 
Siragadikka Aasai: சீதா செயினால் போலீஸில் சிக்கும் முத்து - மீனா? தேவையா இது?

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோட் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

சிறகடிக்க ஆசை தொடரில் முத்து வேன் வாங்கி இருக்க அதன் பூஜை விழாவில் கலந்துக்கொண்ட சீதா நகை திருட்டு போய் விட்டது. திருடியை துரத்தி கொண்டு சென்ற மீனாவுக்கு அது வீட்டு வந்த சாமியார் என தெரிந்துவிடுகிறது. அவரை கண்டுபிடிக்க இருவரும் ப்ளான் போடுகின்றனர். 

இந்த பக்கம் சீதாவின் தாலியை காணாமல் கடுப்பில் ஆகிவிடுகிறார் அருண். அது என்னுடைய அம்மாவின் தாலி. அது இல்லாமல் வீட்டுக்கு வரக்கூடாது என துரத்தி விடுகிறார். இது தெரிந்த முத்துவிற்கு அருண் மீது கோபம் வந்துவிடுகிறது. 

சரியாக அந்த சாமியார் நகையை விற்ற இடத்துக்கு ப்ளான் செய்து திருடன் வேஷத்தில் போய் அவரை பிடிக்க செல்கிறார்கள். அவர்கள் சென்ற நேரம் போலீஸார் வந்து அந்த கூட்டத்தை பிடிக்க இவர்களையும் திருடும் ஆட்கள் என நினைத்து அள்ளி சென்று விடுகின்றனர். 

மீனா மற்றும் முத்து போலீஸ் ஸ்டேஷனில் எவ்வளவு சொல்லியும் இருவரையும் அவர்கள் விடாமல் அண்ணாமலைக்கு கால் செய்து சொல்லிவிடுகிறார். அவரும் அதிர்ச்சியாகி ரவிக்கு விஷயத்தை சொல்ல அவர் ஸ்ருதியுடன் வந்து சீதா நகைக்காக அவர்கள் செய்ததை சொல்கிறார். 

ஆனால் இதே நேரத்தில் சீதாவின் கணவர் அருண் வந்து முத்துவுக்கு எதிராக பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் ஒரு செயினை வைத்து அடுத்து என்ன செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

From Around the web