Categories: Cinema News latest news television

சிறகடிக்க ஆசை: ரவியை கத்திவிட்டு செல்லும் ஸ்ருதி… விஜயாவிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் ரோகிணி…!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் முத்துவுடம் மீனா பேசிக்கொண்டு இருக்கிறார். ரவிக்கு கல்யாண பேச்சு நின்னு போனதுல எதுவும் ஃபீல் பண்றான எங்க இருக்கான் எனக் கேட்கிறார். அவர் ஃபீல் பண்ண மாதிரி தெரியல. அப்போவே கிளம்பி ஹோட்டல் போய் விட்டார் என்கிறார்.

அவனுக்கும் உன்னை மாதிரி ஒரு நல்ல பொண்ணு மனைவியா வரணும். எனக்கு ஒரு பொண்ணு சரியா வருவானு தோணுது என்கிறார். ஆச்சரியப்பட்ட மீனா யார் எனக் கேட்க நேரம் வரும்போது சொல்றேன். யாருனு சொல்லுங்க என்கிறார். சொல்றேன் சொல்றேன் எனக் கூறிவிட்டு கிளம்பிவிடுகிறார்.

இதையும் படிங்க: அந்த இடத்தில் டாட்டூ குத்திய அனன்யா!.. காட்ட சொல்லி வற்புறுத்திய விசித்ரா.. இதெல்லாம் ரொம்பு தப்பு!..

ரவியை காண வரும் ஸ்ருதி அவரை தனியாக அழைத்து பேச வேண்டும் என்கிறார். அவருடன் செல்லும் ரவியிடம் எனக்கு எங்க அப்பா, அம்மா கல்யாணம் பண்ணி வைக்க ப்ளான் பண்ணுறாங்க. நம்ம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம் என்கிறார். எனக்கும் தான் பொண்ணு பார்த்தாங்க. ஆனா பிரச்னையால் நின்னுட்டு எனக் கூறுகிறார் ரவி.

நம்ம இப்பையே கல்யாணம் பண்ணிக்கலாம் எனக் கேட்கிறார் ஸ்ருதி. இதனால் அதிர்ச்சியாகும் ரவி அவசரப்படாதே, பொறுமையா இரு எனக் கூறுகிறார். ஆனால் கடுப்பான ஸ்ருதி உன்கிட்ட பேசி இனி ஒன்னுமே ஆகப்போறது இல்ல. நான் பேச வேண்டிய இடத்தில் பேசிக்கிறேன் எனக் கிளம்பி விடுகிறார்.

அடுத்து ரோகினியின் ப்யூட்டி பார்லருக்கு வரும் விஜயாவிடம் பெயிண்ட் அடிப்பதாக கூறுகிறார். பெயர் மாறி இருப்பதை மறைத்து விட்டார். உள்ளே செல்லும் விஜயா தலை வலிக்குது என மசாஜ் செய்ய சொல்கிறார். ரோகினி செய்து கொண்டு இருக்க அப்போ அந்த பிராஞ்சின் முதலாளி வருகிறார்.

இதையும் படிங்க: சின்ன யு.. பெரிய ஏ!.. லியோ படத்தோட தரமான சம்பவம்!.. அந்த அப்டேட் கிங் சொன்ன செம மேட்டர்!..

Published by
Shamily