×

சிரஞ்சீவியை ஓரம் கட்டிய வலிமை... என்ன காரணம்?

படத்தின் அனைத்துக் காட்சிகளுக்குமான படப்பிடிப்பு முடிந்த நிலையில், ஒரேயொரு ஆக்ஷன் காட்சி மட்டும் வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டியிருந்தது. 

 
a99c8bf0-d14c-456d-8127-474c81a53b87

வலிமை படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளர். சிரஞ்சீவியின் காட்ஃபாதருக்கும் அவர்தான் கேமரா. வலிமையின் முக்கிய காட்சிகளை எடுக்க வலிமை படக்குழு ரஷ்யா சென்றுள்ளது. அவர்களுடன் நீரவ் ஷாவும் சென்றுள்ளார். 

இதன் காரணமாக ஒருவாரம் காட்ஃபாதர் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் வலிமை படப்பிடிப்பு முடித்து நீரவ் ஷா ஹைதராபாத் திரும்பிய பிறகே காட்ஃபாதர் படப்பிடிப்பு தொடங்கும்.

aji

வலிமையை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். படத்தின் அனைத்துக் காட்சிகளுக்குமான படப்பிடிப்பு முடிந்த நிலையில், ஒரேயொரு ஆக்ஷன் காட்சி மட்டும் வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டியிருந்தது. 

கொரோனா இரண்டாம் அலையில் போடப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக இதுவரை வெளிநாடு செல்ல முடியாமல் இருந்தவர்கள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் ரஷ்யா சென்றனர். திட்டமிட்டபடி அங்கு படப்பிடிப்பு முடிந்ததும் அஜித் உள்ளிட்ட படக்குழு சென்னை திரும்பும். தீபாவளிக்கு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். 

காட்ஃபாதர் மலையாள லூசிபரின் தெலுங்கு ரீமேக். மோகன் ராஜா இந்த ரீமேக்கை இயக்குகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். சிரஞ்சீவியின் 153 வது படமாக இது தயாராகிறது.

aji
 

From around the web

Trending Videos

Tamilnadu News