Ajith: ‘கங்குவா’வுக்கு பிறகு யாருமே கண்டுக்கலண்ணே! அஜித்துடன் ரேஸ் சர்க்யூட்டில் சிறுத்தை சிவா
ரேஸில் பிஸியாக இருக்கும் அஜித்:
தற்போது மலேசியாவில் அஜித் 24 சீரிஸ் கார் ரேஸ்சில் கலந்து கொள்வதற்காக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் மலேசியாவில் உள்ள முருகன் கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி வைரலானது. இதற்கு முன் பில்லா திரைப்படத்தில் அமைந்த சேவல் கொடி பாடல் அந்த கோயிலில் தான் படமாக்கப்பட்டது.
அவரைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அஜத்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டனர். ஒரு சில பேருடன் அஜித் நின்று புகைப்படம் எடுத்து சென்றார். இன்று மீண்டும் தனது கார் ரேஸ் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் அஜித். இந்த நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா ரேஸ் சர்க்யூட்டில் அஜித்துடன் நடந்து செல்வது மாதிரியான வீடியோ வைரலாகி வருகின்றது.
ரேஸ் சர்க்யூட்டில் சிறுத்தை சிவா:
இதை பார்த்த ரசிகர்கள் சிறுத்தை சிவாவுக்கு அங்கு என்ன வேலை என கேட்டு வருகின்றனர். ஏற்கனவே அஜித்தை வைத்து வீரம், விசுவாசம், வேதாளம் போன்ற திரைப்படங்களை கொடுத்தவர்தான் சிறுத்தை சிவா. அவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளியாகி அட்டர் ஃப்ளாப் ஆன திரைப்படம் கங்குவா. அந்த திரைப்படத்தின் தோல்வியின் எதிரொலி சிறுத்தை சிவாவை மிகவும் பாதித்தது.

அதன் பிறகு அவர் எந்த படங்களும் இயக்குவதாக தெரியவில்லை. குட்பேட் அக்லி திரைப்படத்திற்கு பிறகு அஜித்தின் லைன் அப்பில் சிறுத்தை சிவாவும் இருந்தார். ஆனால் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் அஜித் இணைய போகிறார். இந்த நிலையில் ஆதிக் அஜித் படத்திற்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் சிறுத்தை சிவா இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது தெரியவில்லை.
அண்ணே வேணாம்னே:
ஒருவேளை தன்னுடைய அடுத்த ப்ராஜெக்ட் பற்றி பேசுவதற்காக கூட சிறுத்தை சிவா அஜித்தை சந்திக்க அங்க போயிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் அஜித்தின் ஒரு நம்பிக்கை மிகுந்த இயக்குனர் சிறுத்தை சிவா. அதனால் அவருக்கு ஒரு படத்தில் கால்ஷீட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரசிகர்கள் இதை விரும்பவில்லை. இப்பொழுது தான் அஜித் அவருடைய ரூட்டை மாற்றி ரசிகர்களுக்கான படத்தை தந்து வருகிறார். மீண்டும் பழைய ரூட்டில் போய் அவருடைய மார்கெட்டை கெடுக்க வேண்டாம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
