Categories: Cinema News latest news

கோவா வேண்டாம் கும்பிடு போட்ட சூர்யா.! அந்த பக்கம் சிறுத்தை சிவா என்ன செய்றார் பாருங்க சார்…

சூர்யா தற்போது உற்சாகமாக தனது அடுத்தடுத்த பட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்ததாக அவர்  பாலா இயக்கத்தில் தனது 41 வது திரைப்படத்தில் நடித்து வந்தார். கன்னியாகுமரியில் முதற்கட்ட சூட்டிங் முடிந்தது.

அங்கு ஏற்பட்ட சிறு மனக்கசப்பு காரணமாக கன்னியாகுமரியில் இருந்து சூர்யா கிளம்பி வந்து விட்டார் என்று கூறப்பட்டது. அதன் பிறகு இரண்டாவது ஷெடியுள் ஆரம்பமாகும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வரை அதற்கான பணிகள் நடைபெற்ற மாதிரி தெரியவில்லை.

இரண்டாம் கட்ட சூட்டிங் கோவாவில் நடைபெறும் என்று முதலில் தகவல் இருந்தது. ஆனால், கோவா வேண்டாம் பாண்டிச்சேரியில் செட் அமைத்து படமாக்கி கொள்ளலாம் என்று சூர்யா தறப்பு கூறியதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக பாண்டிச்சேரியில் செட் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாம்.

இதையும் படியுங்களேன் – அடுத்த ஏப்ரல் என்னோடது… வீடியோ வெளியிட்டு கோலிவுட்டை அதிர வைத்த தனுஷ்…

கோவா வேண்டாம் என்று சூர்யா நினைத்தாலும், தற்போது கோவா அவரை விடுவதாக  இல்லை போலும். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படத்திற்கு தற்போது லொகேஷன் பார்க்கும் பணியில் சிறுத்தை சிவா ஈடுபட்டுள்ளாராம். அவர் தற்சமயம் லொகேஷன் பார்க்கும் இடம் கோவா என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா படங்கள் வழக்கமாக தமிழகத்தில் தொடங்கி கொல்கத்தாவில் தான் பெரும்பாலும் முடிகிறது. அதேபோல் தற்போது கோவாவில் முடியும் வண்ணம் தான் ததிரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன் காரணமாகத்தான் கோவாவில் லொகேஷன் பார்த்து வருகிறாராம் சிறுத்தை சிவா.

Manikandan
Published by
Manikandan