×

`அமைதியா உட்காரு முட்டாள்’ - ஹாலிவுட் பாப் ஸ்டாரை ஓபனாகத் திட்டிய கங்கனா

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ஹாலிவுட் பாப் ஸ்டார் ரிஹானாவைத் திட்டி பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார். 
 
 

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக ஹாலிவுட் பாப் ஸ்டாரான ரிஹானே, நாம் ஏன் விவசாயிகள் போராட்டத்தைக் கண்டுகொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பி ட்விட்டரில் ஆதரவு தெரிவித்திருந்தார். அதேபோல், பருவநிலை மாறுபாட்டுக்கு எதிராகப் போராடி வரும் சமூக ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்கும் ஆதரவு தெரிவித்திருந்தார். 

இந்தநிலையில், நடிகையில் பாப் பாடகருமான ரிஹானாவுக்கு எதிராக நடிகை கங்கனா பொங்கியிருக்கிறார். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் கங்கனா, `யாரும் இதைப் பற்றி பேசமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் விவசாயிகள் இல்லை. தீவிரவாதிகள். இந்தியாவை பிளவுபடுத்த அவர்கள் முயற்சி செய்கிறார்கள். சீனா இந்தியாவைக் கைப்பற்றிக்கொள்ள இவர்கள் உதவுகிறார்கள். அமெரிக்கா போல சீனாவின் காலனியாக இந்தியா மாற விரும்புகிறார்கள். 


அமைதியாக உட்காரு முட்டாள். உங்களைப் போல் எங்கள் நாட்டை நாங்கள் விற்கவில்லை’’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருக்கிறார்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News