Categories: Cinema News latest news throwback stories

அவரால் அந்த படப்பிடிப்புல கண்ணீர் விட்டேன்..! –  நடிகையை அழ வைத்த அஜித்…

தமிழில் பெரும் ரசிக வட்டாரங்களை கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் தல அஜித். பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் அஜித் இப்போது வரை தனது மார்க்கெட் குறையாமல் ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார்.

துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் அஜித். இந்த திரைப்படத்தின் பெயரானது சில நாட்களுக்கு முன்பு அதிக சர்ச்சையானது.

நடிகை சீதா ஒரு பேட்டியில் பேசும்போது நடிகர் அஜித்தை பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அஜித் பலருக்கும் நன்மை செய்தவர் என்பது நாம் அறிந்த விஷயம். அஜித் அவரது வீட்டில் இருக்கும் பொருட்கள் பழசானதும் புது பொருட்கள் வாங்கும் பொழுது அந்த பழைய பொருட்களை அவர் வீட்டில் வேலை பார்த்த ஊழியர்களுக்கு கொடுத்து விடுவார் என சீதா அந்த பேட்டியில் கூறி இருந்தார்.

படப்பிடிப்பில் நடந்த சம்பவம்:

மேலும் அவர் அஜித் பற்றி கூறும்போது ஆஞ்சநேயா படத்தில் அஜித்திற்கு அம்மாவாக சீதா நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் இறப்பது போன்ற காட்சி ஒன்று வரும் அப்போது அவரை தூக்கி வைத்துக்கொண்டு அஜித் அழுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

அந்த காட்சியில் சித்தாவை தூக்கி வைத்துக்கொண்டு அஜித் அழ துவங்கியபோது அதை பார்த்து சீதாவுக்கும் கண்ணீர் வந்துவிட்டது. அவரும் அழத் தொடங்கிவிட்டார் ஆனால் படத்தில் அது தெரியாதது போல அஜித் மேனேஜ் செய்து விட்டார்.

பிறகு படப்பிடிப்பு முடிந்ததும் ஏன் அழுதீர்கள் என சீதாவிடம் கேட்டுள்ளார் அஜித். அதற்கு சீதா ”நீங்கள் அழுததை பார்த்து எனக்கும் அழுகை வந்துவிட்டது” என கூறியுள்ளார். அவ்வளவு சிறப்பாக அஜித் நடித்திருந்ததை சீதா பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

Published by
Rajkumar