மீண்டும் சின்னத்திரையில் சிவகார்த்திகேயன்... அட இந்த நிகழ்ச்சியில் தானுங்கோ

ஸ்டாண்ட் அப் காமெடியின் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரியானவர் சிவகார்த்திகேயன். இடைவிடாமல் அவர் செய்யும் நகைச்சுவையில் பல ரசிகர்களை கவர்ந்தார். மெரினா படம் மூலம் தமிழ் திரையிலகில் அறிமுகமான சிவாவிற்கு பெரிய ரீச்சை கொடுத்தது எதிர் நீச்சல் படம் தான். அதை தொடர்ந்து, டாப் இயக்குனர்களின் நாயகனாகி இருக்கிறார். முன்னணி நடிகராக இருக்கும் சிவா தற்போது, டாக்டர் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சிவா தற்போது ஹிட் அடித்து கொண்டு இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். இதற்கான, ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சும்மாவே கலாய்களை தெறிக்க விடும் சிவா, வைரல் கோமாளிகளுடன் இணைந்து தூள் கிளப்புவார் என்கின்றனர் நெட்டிசன்கள்.
இந்த வாரம் Vera level la fun irukku 🤩😀#CookWithComali - வரும் சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #VijayTelevision #Sivakarthikeyan pic.twitter.com/4EHbC87qsK
— Vijay Television (@vijaytelevision) January 5, 2021
8 போட்டியாளர்களுடன் இணைந்து கோமாளி செய்யும் ரகளைகளால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சமீப காலமாக ரசிகர்கள் கூட்டம் டாப் கியரில் இருப்பது குறிப்பிடத்தக்கது.