×

பேயைத் தூக்கிச் செல்லும் காதல் ஜோடி… லொள்ளு இயக்குனருடன் கைகோர்த்த சிவா!

சிவா மற்றும் நிக்கி கல்ராணி நடிக்கும் புதிய படத்தை லொள்ளுசபா புகழ் இயக்குனர் ராம்பாலா இயக்க உள்ளார்.

 

சிவா மற்றும் நிக்கி கல்ராணி நடிக்கும் புதிய படத்தை லொள்ளுசபா புகழ் இயக்குனர் ராம்பாலா இயக்க உள்ளார்.

லொள்ளு சபா என்ற ஸ்பூப் தொடரை இயக்கி தமிழ் சினிமாவுக்கு சந்தானம், ஜீவா, சாமிநாதன், யோகி பாபு மற்றும் மனோகர் போன்ற நகைச்சுவை நடிகர்களைக் கொடுத்தவர் ராம்பாலா. அதில் ஒருவரான சந்தானம் இப்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாகப் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் ராம்பாலா சந்தானத்தை வைத்து தில்லுக்கு துட்டு பாகம் 1 மற்றும் பாகம் 2 ஆகியவற்றை இயக்கினார். தனது அடுத்த படமாக இப்போது அகில உலக சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் தமிழ்ப்படம் சிவாவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்த படமும் கலகலப்பான பேய்க் காமெடி படம் என சொல்லப்படுகிறது. இடியட் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News