Categories: Cinema News latest news throwback stories

படப்பிடிப்பில் ஜெயலலிதா செய்த வேலை.. கடுப்பான சிவாஜி.. அதுக்கு அப்புறம் நடந்துதான் டிவிஸ்ட்!..

பேராசிரியாக ஆசைப்பட்டு விபத்தில் சினிமாவுக்கு வந்தவர் ஜெயலலிதா. அம்மா நடிகை என்பதால் அம்மாவின் வற்புறுத்தலால் நடனம் கற்று அப்படியே சினிமாவுக்கு வந்தவர். ஆனால், நடிக்க வந்த புதிதிலேயே எம்.ஜி.ஆர், சிவாஜி என முன்னணி நடிகர்களுடன் நடிக்க துவங்கிய நடிகை இவர். வெண்ணிற ஆடை படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கிய ஜெயலலிதா எம்,.ஜி.ஆர் மற்றும்சிவாஜியுடன் பல படங்களில் நடித்தவர்.

jayalalitha

எம்.ஜி.ஆர் படங்களில் நடிப்பதை நிறுத்தியபின் ஜெய்சங்கர், முத்துராமன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்தார். ஜெயலலிதாவுக்கு ஒரு பழக்கம் உண்டு. படப்பிடிப்பிற்கு வந்துவிட்டால் நடிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஆங்கில நாவல்களை படித்துக்கொண்டிருப்பார். பெரிதாக யாரிடமும் பேசமாட்டார். படப்பிடிப்பில் இயக்குனரிடம் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார். சிலருக்கு இதை பார்க்கும் போது அவர் திமிறு பிடித்தவர் என தோன்றும்.

பொதுவாக சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற பெரிய ஹீரோக்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வரும்போது அவரை பார்த்ததும் அப்படத்தில் நடிக்கும் சக நடிகை மற்றும் நடிகர்கள் எழுந்து நின்று வணக்கம் தெரிவிப்பார்கள். இது காலம் காலமாக நடந்து வரும் விஷயம்தான். சிவாஜியுடன் ஜெயலலிதா நடித்த முதல் திரைப்படம் மோட்டார் சுந்தரம் பிள்ளை. இப்படத்தில் சிவாஜியின் மகளாக நடித்தார் ஜெயலலிதா.

இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சிவாஜி வந்த போது ஜெயலலிதா கால் மேல் கால் போட்டு ஆங்கில புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தாராம். இதைக்கண்ட சிவாஜி கோபமாகி அப்படத்தில் சிறுமியாக நடித்த குட்டி பத்மினியை அழைத்து ‘யாருடி அவ.. வணக்கம் கூட சொல்ல மாட்டேங்குறா.. அவ்வளவு திமிர் பிடித்தவளா?’ என கேட்டாராம். அதற்கு குட்டி பத்மினி ‘அவர் அப்படித்தான் அங்கிள்’ என சொன்னதும் ‘ஓஹோ’ என சொல்லிவிட்டு போய்விட்டாராம்.

sivaji

ஆனால், சிவாஜிக்கு அவரை றிமுகம் செய்தபோது எழுந்து நின்று வணக்கம் சொன்னாராம் ஜெயலலிதா. எனவே, அவர் உள்நோக்கத்துடன் அப்படி நடந்து கொள்ளவில்லை என புரிந்து கொண்டாராம் சிவாஜி. அதன்பின் பல திரைப்படங்களில் ஜெயலலிதாவுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கொத்தும் குலையுமா நிக்குதே!.. கொத்திட்டு போங்கடா!.. கழட்டிவிட்டு காட்டும் விஜே பார்வதி…

Published by
சிவா