Categories: Cinema News latest news throwback stories

மரண படுக்கையில் மணிரத்னத்திடம் சான்ஸ் கேட்ட சிவாஜி…நடந்துதான் சோகம்…

மணிரத்னத்திடம் மருத்துவமனையில் இருக்கும் போது சிவாஜி கணேசன் சான்ஸ் கேட்டாராம். ஆனால் அது நடக்காமல், காலம் இதற்கு முற்றுப்புள்ளி வைத்த சம்பவமும் நிகழ்ந்து இருக்கிறது.

தமிழ் சினிமாவின் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மணிரத்னம். இவரின் படங்கள் எல்லாமே பெரிய அளவில் ரசிகர்களிடம் பேசப்படும். ரோஜா துவங்கி சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் வரை மிகப்பெரிய தாக்கத்தினை உண்டாக்கும் படத்தினை எடுப்பதில் மணிரத்னம் நிகர் அவர் தான்.

மணிரத்னம்

ஒருமுறை மணிரத்னத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு அருகில் இருந்த அறையில் சிவாஜி கணேசனும் தீவிர சிகிச்சையில் இருந்தார். அப்போது மணிரத்னம் மகன் நந்தனிடம் பேசினாராம். அப்போது, ‘உங்கப்பன்கிட்ட சொல்லி எனக்கு ஒரு சான்ஸ் வாங்கிக் குடுடா’என கேட்டிருக்கிறார். ஆனால் அடுத்த நாளே சிவாஜி இயற்கை எய்திவிட்டாராம்.

சிவாஜி

இதுகுறித்து பின்னாளில் மனம் திறந்த மணிரத்னம் எனக்கு சினிமா மேல ஆசை வந்ததுக்கு மிக முக்கியமான காரணம், சிவாஜி சார் படங்கள்தான். மகா கலைஞனுக்குத் தீனி போடுற மாதிரி கதையோ, கேரக்டரோ அப்போ என்னிடம் இல்லை. கண்டிப்பாக அவரை வைத்து ஒரு படம் செய்ய ஆசையில் இருந்தேன். ஆனால் காலம் அவரை எடுத்துக்கொள்ளும் என நான் நினைக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

Published by
Shamily