Categories: Cinema News latest news throwback stories

படப்பிடிப்பு தளத்திலே பிரபுவினை புரட்டி எடுத்த சிவாஜி… வலி தாங்க முடியாமல் கதறிய பிரபு…

பிரபு தனது தந்தையுடன் இணைந்து நடித்த சங்கிலி படம். அதில் படப்பிடிப்பு தளத்தில் சிவாஜி அவரை அடி வெளுத்த தகவல்கள் சில கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

சிவாஜி நடிப்பு உலகின் டான்னாக இருந்தாலும், தனது மகனை சினிமாவில் வர வேண்டும் என்றால் திருமணம் செய்து கொண்டு தான் வரவேண்டும் எனக் கூறிவிட்டாராம். இதை தொடர்ந்து பிரபு திருமணம் முடிந்தே சங்கிலி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

சிவாஜி

இப்படத்தின் ஷூட்டிங் அருணாச்சலம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. சிவாஜிக்கு இப்படத்தில் காவலதிகாரி வேடம். பிரபு காளி என்ற வேடத்தில் நடித்திருந்தார்.

படத்தில் சிவாஜிக்கும் பிரபுவிற்கும் சண்டை காட்சிகள் இருந்தது. அதில் சிவாஜி, பிரபுவினை நிஜமாகவே அடித்தாராம். அந்த படத்தில் மட்டுமல்லாது, வம்ச விளக்கு என்ற படத்தில் இது தொடர்ந்து இருக்கிறது. சிவாஜி, பிரபுவினை முதுகில் பிரம்பால் அடிக்கும் காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கும். இதற்காக 4 வாக்கிங் கம்புகளை சிவாஜி அடித்தே உடைத்துவிட்டாராம்.

சிவாஜி

ஷூட்டிங் இடைவேளையின்போது, மகனே ஏதும் பிரச்சனையா என்று பிரபுவிடம் கேட்டு இருக்கிறார். அப்பா ஒண்ணும் இல்லை என்று சொல்லிவிட்டு, ரூமுக்குள் சென்று வலி தாங்க முடியாமல் கத்தி கதறி அழுததாக பிரபு ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily