Connect with us

Cinema News

மேடையில் அரை உயிரான சிவாஜி கணேசன்…! வசனத்தால் சிலிர்த்த உடல்.. இளையராஜா சொன்ன சம்பவம்..!

Sivaji Ganesan: நடிப்பிற்காக உயிரை கேட்டால் கூட சிரித்து கொண்டே கொடுக்கும் பிரபலம் சிவாஜியாக மட்டுமே இருக்கும். அப்படி ஒருமுறை கிட்டத்தட்ட மயக்கத்துக்கே போனவர். காதலில் விழுந்த வசனத்தால் மீண்டும் எழுந்த ஆச்சரிய தகவலை இளையராஜா தெரிவித்து இருக்கிறார்.

இளையராஜாவின் பேட்டியில் இருந்து, ஒருமுறை சிங்கப்பூரில் இசை கச்சேரியும், சிவாஜிக்கு பாராட்டு விழாவும் நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அப்போது சிவாஜிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாம். இதையறிந்த இளையராஜா வேண்டாம் அண்ணா நீங்க ரெஸ்ட் எடுங்க என்றாராம்.

இதையும் வாசிங்க: அடுத்தவன பத்தி தெரியலனா உங்க வேலையா பாருங்க!… சிவகார்த்திகேயனுக்காக வரிஞ்சிகட்டும் சீரியல் நடிகர்…

ஆனால் அதை மறுத்த சிவாஜி சிங்கப்பூர் சென்று இருக்கிறார். மேலும், சிவாஜி வாக்கு கொடுத்துட்டேன். இனி தனக்கு என்ன ஆனாலும் அது மேடையிலே ஆகட்டும் எனவும் கூறினாராம். நிகழ்ச்சி தொடங்கி விட்டது. பாடல்கள் ஒலித்து கொண்டிருக்க இளையராஜாவை உசுப்பி இருக்கிறார் சிவாஜி.

அவரிடம் ராஜா எனக்கு என்னவோ போல இருக்கு என்றாராம். இதனால் இளையராஜா பதறிவிட்டார். ஒரு கட்டத்தில் சிவாஜி, இளையராஜா தோள்மீது சாய்ந்து, உணர்விழந்து விழுந்துவிட்டாராம். உடனே இளையராஜா நிகழ்ச்சி குழுவை அழைத்து மருத்துவமனை போகணும் எனக் கேட்டு இருக்கிறார்.

ஆனால் அவர்கள் 30 நிமிசத்துல சிவாஜி சாருக்கு இங்க மரியாதையே செஞ்சிடலாம் என ஏடாகூடமாக பேசி இருக்கின்றனர். இதனால் கடுப்பாகி விட்டாராம் இளையராஜா. அதே சமயத்தில் மேடைக்கு அருகில் சிவாஜி பேசிய வசனங்கள் ஸ்க்ரீன் வைத்து ஒளிபரப்பி கொண்டு இருந்தனர். ஒரு கட்டத்தில் சிவாஜி பேசிய கட்டப்பொம்மன் வசனம் ஒலித்ததாம்.

இதையும் வாசிங்க: தீபாவளி ரேஸில் கமல், ரஜினியை முந்திய பிரபல நடிகர்.. ஆனா இப்போ அவருக்கு அப்பா சான்ஸ் கூட இல்லையாம்..!

உடனே சிவாஜி உடல் சிலிர்த்து எழுந்து ஜம்முனு உட்கார்ந்தாராம். திரையில் அந்த காட்சியை எனர்ஜியாக பார்த்து இருக்கிறார். இந்த காட்சி முடிய ரசிகர்கள் கரகோஷம் எழுப்ப இதை பார்த்த இளையராஜாவுக்கு கண்ணில் தண்ணியே வந்துவிட்டதாம். இதை ஒருமுறை அவர் பேட்டியில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Cinema News

To Top