Categories: latest news throwback stories

நான் ஓவராத்தான் நடிக்கிறேன் போல!..கமலை பார்த்து மிரண்ட சிவாஜிகணேசன்!..

கமலை வைத்து சூப்பர் ஹிட் படமான சிங்காரவேலன் என்ற படத்தை கொடுத்தவர் ஆர்.வி.உதயகுமார். முதலில் இந்த படத்தை எடுப்பதில் கமலுக்கும் சரி உதயகுமாருக்கும் சரி சிறிய தயக்கம் இருந்ததாம். துணிந்து எடுத்து படத்தை வெற்றிபடமாக காட்டியுள்ளனர்.

மேலும் கமலை பற்றி ஒரு மேடையில் பேசிய உதயகுமார் கமலை பார்த்து சிவாஜி மிரண்ட ஒரு விஷயத்தை பகிர்ந்தார். ஒரு சமயம் சிவாஜி உடல் நிலை சரியில்லாத போது அவரை பார்க்க சென்றிருக்கிறார் உதயகுமார். அப்போது சிவாஜிக்காக ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த கதையோடு சென்றிருக்கிறார்.

சிவாஜி காலடியில் அமர்ந்து காலை பிடித்து அமுக்கி கொண்டிருந்தாராம் உதயகுமார். அப்போது அந்த கதையையும் சொல்லியிருக்கிறார். அதை கேட்ட சிவாஜி ‘அது இருக்கட்டும், கமல்னு ஒரு பையன் இருக்கிறானே? அவன் என்னம்மா நடிக்கிறான்? ஷட்டில் ஆக்டிங் அவன் கிட்ட இருக்கு, ஆனால் என்கிட்ட ஸ்டைலிஷான ஆக்டிங் தான், ’ என்று கூறினாராம்.

மேலும் அவர் கூறும் போது ‘ நான் இருந்தாலும் கொஞ்சம் ஓவராத்தான் நடிக்கிறேன், கமல் எவ்வளவு பிரம்மாதமாக நடிக்கிறான்’ என்று வியந்து கூறினாராம். அந்த அளவுக்கு நடிப்பின் மீது பேரன்பு கொண்டவர் நடிகர் கமல்ஹாசன். அவரிடம் இருந்து நடிப்பு கற்றுக் கொள்ளுங்கள் என்று ஆர்.வி.உதயகுமார் கூறினார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini