Categories: Cinema News latest news throwback stories

“சம்பளமே வேண்டாம்”…  சிவாஜியின் நட்பை கலங்கடித்த இயக்குனர்… கடைசில இப்படி பண்ணிட்டாரே??

1969 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், சிவக்குமார், லட்சுமி, நாகேஷ் ஆகியோரின் நடிப்பில் வெளியான வெற்றித் திரைப்படம் “காவல் தெய்வம்”. இத்திரைப்படத்தை கே.விஜயன் இயக்கியிருந்தார். மேலும் பழம்பெரும் நடிகரான எஸ்.வி.சுப்பையா இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

Kaaval deivam

நடிகர் எஸ்.வி.சுப்பையா, சிவாஜி கணேசனுக்கு மிகவும் பிடித்த நடிகராம். மேலும் இருவரும் மிகவும் நட்பாக பழகி வந்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் “காவல் தெய்வம்” திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டாராம் சிவாஜி கணேசன். ஆனால் எஸ்.வி.சுப்பையாவின் மேல் வைத்திருந்த நட்பின் காரணமாக தனக்கு சம்பளமே வேண்டாம் எனவும் சிவாஜி கணேசன் கூறியிருந்தாராம்.

இப்படி இருக்க, எஸ்.வி.சுப்பையா ஒரு நாள் சிவாஜி கணேசனுக்கு டிஃபன் கேரியரில் சாப்பாடு கொண்டு வந்தாராம். “உங்களுக்கு உணவு கொண்டு வந்திருக்கிறேன்.. இதனை நீங்கள் நிச்சயமாக சாப்பிட வேண்டும்” என கூறிவிட்டு சென்றிவிட்டாராம்.

SV Subbiah

அந்த டிஃபன் கேரியரை திறந்து பார்த்தார் சிவாஜி. அதில் முதல் அடுக்கில் சாப்பாடு இருந்தது. ஆனால் கடைசி அடுக்கில் ரூ. 15,000 இருந்தது. இதனை கண்ட சிவாஜி கடும் கோபத்திற்கு உள்ளானாராம்.

உடனே சுப்பையாவை அழைத்த சிவாஜி “நீ என்ன காரியம் செய்திருக்கிறார்? எனக்கு சம்பளம் தருகிறாயா நீ? நீ எனக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்றால் எவ்வளவு கொடுக்க வேண்டும் தெரியுமா? நான் இப்போது எவ்வளவு சம்பளம் வாங்கி வருகிறேன் என்றாவது தெரியுமா?

Sivaji Ganesan

உனது படத்தில் நடிக்கும்போதே நான் சம்பளம் வாங்கமாட்டேன் என்று கூறித்தானே நடித்தேன். அப்படி இருக்கும்போது நீ எனக்கு சம்பளம் கொடுத்தால் என்ன நியாயம்?” என கோபமாக கத்தினாராம். அதன் பிறகு அந்த பணத்தை எஸ்.வி.சுப்பையாவிடம் திரும்பக்கொடுத்துவிட்டாராம் சிவாஜி கணேசன்.

தனது நண்பராகவே இருந்தாலும் சிவாஜி கணேசன் ஒரு பெரிய நடிகர், ஆகவே அவருக்கு தன்னால் முடிந்த சம்பளத்தை தரவேண்டும் என எஸ்.வி.சுப்பையா நினைத்திருக்கிறார். ஆனால் தனது முடிவில் மிகவும் உறுதியாக இருந்த சிவாஜி, அந்த பணத்தை திரும்ப தந்தது நட்பிற்கு அவர் அளித்த மரியாதையை காட்டுகிறது.

Published by
Arun Prasad