Categories: Cinema News latest news throwback stories

இயக்குனருக்கு முதல் படம்… உதவி இயக்குனரை பொறுப்பேற்க சொன்ன சிவாஜி… என்ன காரணம் தெரியுமா?

கௌரவம்

1973 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், உஷா நந்தினி, பண்டரி பாய் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த மெகா ஹிட் திரைப்படம் “கௌரவம்”. இத்திரைப்படத்தை வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கியிருந்தார். சிவாஜி கணேசன் இரட்டை வேடங்களில் நடித்த இத்திரைப்படம், காலம் கடந்தும் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.

Gauravam

பாரிஸ்டர் ரஜினிகாந்த், கண்ணன் ஆகிய இரு கதாப்பாத்திரங்களில் சிவாஜி மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். குறிப்பாக இதில் பாரிஸ்டர் ரஜினிகாந்த் என்ற கதாப்பாத்திரம் மிகவும் பிரபலமான கதாப்பாத்திரமாக அறியப்படுகிறது.

வியட்நாம் வீடு சுந்தரம்

“வியட்நாம் வீடு” சுந்தரம் என்று அழைக்கப்படும் சுந்தரம், தனது இளம் வயதில் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்துகொண்டிருந்தார். ஒரு நாள் அவர் சென்னையின் ஒரு தெருவில் நின்றுகொண்டிருந்தபோது வேகமாக வந்த கார் ஒன்று திடிரென நடு ரோட்டில் பழுதாகி நின்றது. அந்த காரின் உரிமையாளர் காரை தள்ளிவிட யாராவது வருவார்களா என எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில், சுந்தரம் அந்த காரை தள்ளிவிட்டார். கார் இப்போது ஓடத்துவங்கியது.

Vietnam Veedu Sundaram

அந்த காரின் உரிமையாளர் தனக்கு உதவி செய்த சுந்தரத்திடம் சென்று இந்த விளாசத்தில் என்னை வந்து பாருங்கள் என சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அந்த கார் உரிமையாளர் வேறு யாரும் இல்லை. யுஏஏ நாடக கம்பெனி நடத்திக்கொண்டிருந்த ஒய்.ஜி.பார்த்தசாரதிதான் அவர். அவர் கொடுத்த விளாசம் நாடக கம்பெனி விளாசம்தான்.

கதாசிரியரான வேலையாள்

ஒய்.ஜி.பார்த்தசாரதி  நடத்திக் கொண்டிருந்த நாடக கம்பெனியில் எடுபிடியாக வேலை செய்துகொண்டிருந்த சுந்தரத்திற்கு காலப்போக்கில் நாடகம் எழுதுவதில் பேரார்வம் ஏற்பட்டது. அப்படி அவர் எழுதிய நாடகம்தான் “வியட்நாம் வீடு”. இந்த நாடகம் பின்னாளில் திரைப்படமாக உருவானது. அதன் பிறகு “வியட்நாம் வீடு” என்ற டைட்டில் அவரது பெயருடன் ஒட்டிக்கொண்டது.

சிவாஜி எடுத்த முடிவு

வியட்நாம் வீடு சுந்தம் பல திரைப்படங்களில் கதாசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த நிலையில் சிவாஜி கணேசனை வைத்து “கௌரவம்” திரைப்படத்தை இயக்க வாய்ப்பு வந்தது.

Sivaji Ganesan

“கௌரவம்” திரைப்படம் வியட்நாம் வீடு சுந்தரம் இயக்கும் முதல் படம் என்பதால் முழுமையாக அந்த பணியை அவரால் செய்யமுடியாது என சிவாஜி கணேசனுக்கு தோன்றியதாம். ஆதலால் அப்போது சிவாஜி, தனது பல திரைப்படங்களில் அஸோசியேட் இயக்குனராக பணிபுரிந்த ரா.சங்கரன் என்பவரை அணுகினார்.

ரா.சங்கரன்

ரா.சங்கரன் பின்னாளில் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்தார். மேலும் “தேன் சிந்துதே வானம்”, “துர்கா தேவி” போன்ற பல திரைப்படங்களை பின்னாளில் இயக்கினார்.

இதையும் படிங்க:“உன் ஆசையை குழி தோண்டி புதைச்சிடு”.. ஜெயலலிதாவிடம் கண்டிஷனாக சொன்ன தாயார்… என்ன காரணம் தெரியுமா??

Ra Sankaran

ரா.சங்கரனை நேரில் சந்தித்த சிவாஜி கணேசன், “இந்த கௌரவம் திரைப்படத்தில் நீ அஸோசியேட் இயக்குனராக பணியாற்ற வேண்டும்” என கேட்டுக்கொண்டாராம். அப்போது ரா.சங்கரன் பல திரைப்படங்களில் அஸோசியேட்டாக பணியாற்றிவிட்டு இயக்குனர் ஆவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தாராம். ஆதலால் மீண்டும் அஸோசியேட்டாக வேலை பார்க்க அவர் விரும்பவில்லை.

Gauravam

ஆனால் சிவாஜியே நேரில் வந்து கேட்கையில் அவரால் மறுக்க முடியவில்லை. “கௌரவம்” திரைப்படத்தின் கதை நல்ல கதை, ஆனால் அந்த கதை நல்ல திரைப்படமாக உருவாக வேண்டும் என்பதில் சிவாஜி குறிக்கோளாக இருந்ததால்தான் ரா.சங்கரனை சந்தித்தார். ரா.சங்கரனும் சிவாஜிக்காக அத்திரைப்படத்தில் பணியாற்றினார். இவ்வாறு “கௌரவம்” திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

Arun Prasad
Published by
Arun Prasad