Categories: latest news throwback stories

அந்த நடிகையோடு ஒப்பிடும் போது நான் சின்னப்பையன்!… நடிகர் திலகமா இப்படி சொல்றது ?…. யாருப்பா அந்த நடிகை ?…

எந்த ஒரு காலகட்டத்திலும் முன்னனி நடிகையாக இருக்கும் நடிகைகளோடு ஒருதடவையாவது நடித்து விட வேண்டும் என்ற எண்ணம் சக நடிகர்களுக்கும் இருக்கத்தான் செய்யும்.அந்த வகையில் நடிகை ராதா அவரது காலகட்டத்தில் கோலோச்சி இருந்தார்.

அதன் பிறகு வந்தவர் நடிகை நதியா. இவர்கள் இருவரோடும் நடிக்க ஆசைப்பட்ட நடிகர்கள் ஏராளம். இந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் நடிகை நயன்தாரா அப்படிப்பட்ட ஒரு பெருமையில் இருக்கிறார். இந்த நிகழ்வு 50களில் இருந்தே ஆரம்பித்திருக்கிறது.

நடிகை பானுமதி. பன்முகத்திறமைகளை ஒருங்கே பெற்று தன் அசாத்திய திறமையால் அனைவரையும் சிலிர்க்க வைத்த நடிகை. இவரை பார்த்தாலே சக நடிகர்கள் பயம் கலந்த மரியாதையுடன் தான் அணுகுவார்கள். தன் நடிப்பில் எப்பொழுதும் ரசிக்கும் படியான திமிரு தனம் வாய்க்கப்பெற்றவர் நடிகை பானுமதி. இவருடன் நடிக்க் அந்த கால நடிகர்கள் பலபேர் ஆசைப்பட்டதாக செய்திகள் இருக்கின்றது.

அந்த வகையில் ரங்கூன் ராதா, தெனாலிராமன் போன்ற பல படங்களில் சிவாஜியும் பானுமதியும் சேர்ந்து நடித்திருக்கின்றனர். பானுமதியை பற்றி சிவாஜி தன்னுடைய சுயசரிதையில் பானுமதியுடன் நான் நடிக்கும் போது சின்னப்பையன் எனவும் எப்பேற்பட்ட நடிகை பானுமதி எனவும் அவருடன் நடித்ததில் எனக்கு பெருமை எனவும் குறிப்பிட்டிருக்கிறார் சிவாஜி. நடிகர் திலகம் சிவாஜியே இப்படி கூறியதன் மூலம் எப்பேற்பட்ட நடிகையாக இருந்திருக்க வேண்டும் பானுமதி…!

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini