Categories: latest news throwback stories

நடன இயக்குனரை விரட்டி அடித்த சிவாஜி!..படப்பிடிப்பில் அதகளம்..அப்புறம் என்னாச்சி தெரியுமா?!…

சிவாஜி, சத்யராஜ் இருவரும் இணைந்து நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு அனைவரும் வெளியூர் பயணம் மேற்கொண்டனர். இந்த படத்தின் இயக்குனராக இருந்தவர் சித்ரா லட்சுமணன், அவரின் தலைமையில் படக்குழு முழுவதும் வெளியூர் சென்றனர்.

அப்போது உள்ளூரில் படப்பிடிப்பு தளத்தில் டீ, காஃபி சப்ளை செய்வதற்காக கணேசன் என்பவரை தன் கூடவே வைத்திருப்பாராம் சித்ரா. வெளியூர் படப்பிடிப்பிற்காக அந்த கணேசன் என்பவரையும் கூடவே அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

படப்பிடிப்பு நடந்து கொண்ட சமயத்தில் அந்த படத்தின் நடன இயக்குனரான பாபு என்பவர் டேய் கணேசா டீ கொண்டு வா என்று கூறியிருக்கிறார். அப்போது அருகில் சிவாஜி கணேசனும் இருந்திருக்கிறார். அவர் பெயரும் கணேசன் என்பதால் இந்த நடன இயக்குனர் டேய் கணேசா என்று சொன்னதும் ஒரு சிம்மக்குரலில் யாருடா அது? என கர்ஜித்தவாறு கேட்டாராம் சிவாஜி.

அவ்ளோதான் இவரின் குரலைக் கேட்டதும் அந்த நடன் இயக்குனர் அங்கிருந்து பிடித்த ஓட்டம் தான் எங்கு போனார் என்றே தெரியவில்லையாம். அன்றிலிருந்து படக்குழு இந்த சப்ளை செய்யும் கணேசனிடம் இனிமே படப்பிடிப்பு பக்கமே வரக்கூடாது. மெஸ்ஸில் இருந்து கொண்டே உன் வேலைகளை கவனித்துக் கொள் என்று கூறிவிட்டனராம்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini