கோலிவுட்டில் சிவாஜி கணேசனுக்கு இருக்கும் புகழ் இன்றும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது. அப்படிப்பட்ட, நடிப்பு திலகம் சிவாஜியையே ஒரு நடிகர் அசரடித்த தகவல் கசிந்துள்ளது. கோலிவுட்டில் உதவி இயக்குனராக இருந்தவர் நடிகர் ரமேஷ் கண்ணா. பல இன்னல்களை தாண்டி இவருக்கு சில நடிப்பு வாய்ப்புகளும் கிடைத்தது. இவர் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களிடம் உதவி இயக்குனாராக பணியாற்றி இருந்தார்.
அந்த வகையில், இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் உருவான படம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன். அதில் காமெடி நடிகராக முதல் அறிமுகம் இவருக்கு கிடைத்தது. இவரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து, ரஜினிகாந்தே அவருக்கு கால் செய்து பாராட்டினாராம். அதுமில்லாமல், அப்படத்தை குடும்பத்துடன் வந்து பார்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
அந்த படத்தினை பார்த்து விட்டு, என்னுடைய அடுத்த படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் எனக் கூறி சென்றாராம். அப்படம் தான் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் படையப்பா. ஏற்கனவே, ரமேஷ் கண்ணா ரவிக்குமாரின் அசோசியேட்டாக அதே படத்தில் பணிபுரிய இருந்தாராம்.
சென்றவர் நொடிக்கு ஒருமுறை ரமேஷ் கண்ணாவை பார்த்துக் கொண்டே இருந்ததாராம். இவருக்கோ லேட்டா வந்ததற்கு தான் திட்டபோகிறார் என நினைத்திருக்க. பக்கத்தில் இருந்தவரிடம் சிவாஜி கேட்டாராம். அந்த பையனை தெரியுமா என்று. அவர்களோ தெரியாதே எனக் கூறிவிட்டனராம். உடனே அவன் மகாநடிகன். முத்துராம் பையன் கூட ஒரு படம் நடித்துள்ளான். அவ்வளவு அருமையாக இருக்கும் எனப் பாராட்டினாராம்.
அதுமட்டுமல்லாமல், அன்று செட்டில் இருந்த எல்லாரிடமும் ரமேஷ் கண்ணா குறித்து தான் தொடர்ந்து பேசினாராம். இதை பார்த்த ரமேஷ் கண்ணாவிற்கு கண்ணீரே வந்து விட்டதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். ரஜினி அவரிடம் 25 வருடமாக நடித்து வருகிறேன். என்னை ஒருமுறை கூட பாராட்டியது இல்லை. உனக்கு மட்டும் என்ன இத்தனை முறை பாராட்டு என ரமேஷ் கண்ணாவை சீண்டி சென்றதாகவும் கூறி இருக்கிறார்.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…