Categories: Cinema News latest news throwback stories

சிவாஜி வீட்டு பிரியாணி விருந்து.. ரஜினி பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவங்கள்…

திரையுலகில் ஜாம்பாவானாக வலம் வந்தவர் நடிகை சிவாஜி. ரசிகர்கள் இவரை நடிகர் திலகம் என அழைத்தனர். செவாலியர் பட்டமும் இவருக்கு கொடுக்கப்பட்டது. கருப்பு வெள்ளை முதல் கலர் வரை பல திரைப்படங்களில் நடித்தவர். நடிப்புக்கு இலக்கணம் சொல்லிக் கொடுத்தவர். தன் வீட்டிற்கு அன்னை இல்லம் என பெயர் வைத்தார்.

Sivaji

ரஜினியும், கமலும் இவர் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தனர். விஜயகாந்த உள்ளிட்ட பல நடிகர்கள் இவரை அப்பா என அழைத்ததுண்டு. ஒரு பக்கம் நடிப்பு எனில் ஒரு பக்கம், அன்னை இல்லத்து விருந்து திரையுலகில் மிகவும் பிரபலமாகும். வாரத்திற்கு ஒருமுறை தனக்கு பிடித்த பலரையும் வரவழைத்து வீட்டில் விருந்து போடுவது சிவாஜியின் பழக்கம். அந்த விருந்தில் கலந்து கொண்ட பிரபலங்களில் ரஜினியும் ஒருவர். இதுபற்றி ரஜினி கூறியதாவது:

எனக்கும் அன்னை இல்லத்திற்கு நீண்டகால தொடர்பு உள்ளது. அங்கு பல முறை சென்று விருந்து சாப்பிட்டிருக்கிறேன். சிவாஜி அப்பா உயிரோடு இருக்கும்போது ஞாயிற்றுக்கிழமைகளில் எனக்கு ஃபோன் செய்து ‘நீ ஃபிரியாக இருந்தால் வீட்டுக்கு வா.. பிரியாணி போடுறேன்’ என அழைப்பார்.

அங்கு சென்றால் சினிமா துறையினர் மட்டுமில்லாமல் பல துறைகளை சேர்ந்தவர்களும் இருப்பார்கள், எல்லோரும் ஒன்றாக பிரியாணி சாப்பிடுவோம். அன்னை இல்லத்தில் சாப்பிடாத திரையுலகினரே இருக்க முடியாது. அந்த அளவுக்கு எல்லோர் மீதும் பாசம் காட்டுவர் சிவாஜி.

இப்போது சிவாஜி அப்பா உயிரோடு இருந்திருந்தால் என் தாடியை பார்த்து ‘எனக்கு போட்டியா தாடி வளக்குறியா?’ என கேட்டிருப்பார். ஆனால், அவருக்கு போட்டி யாருமே கிடையாது. இருக்கவும் முடியாது’ என ரஜினி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 9 ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கலுக்கு மோதும் அஜீத்-விஜய் படங்கள்.. யாருக்கு வெற்றி?..

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா