Categories: Cinema News latest news throwback stories

சிவாஜி பார்த்து பயந்த இரண்டு நடிகர்கள்!.. பரவாயில்லையே.. நடிகர் திலகத்தையே சீண்டி பாத்துருக்காங்களே?..

நடிப்புனா சிவாஜியை பார்த்துக் கத்துக்கனும் என பல பேர் சினிமா மீதான ஆசையில் சிவாஜி மீதான அன்பில் கிளம்பி வந்து கொண்டே இருக்கின்றனர். இளம் தலைமுறையினர் மற்றும் இன்னும் சினிமாவில் சாதனை படைக்க
துடித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு சிவாஜி எப்போதுமே ஒரு ரோல் மாடலாக இருந்து வருகிறார்.

பல பேருக்கு பயம் காட்டிய சிவாஜி

அவர் மறைந்தாலும் அவர் விட்டுசென்ற சுவடுகள் இன்று பலபேருக்கு ஒரு உதவியாக இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் சினிமாவில் அவருக்கென்று ஒரு தனி மரியாதையே இருக்கும். பயம் கலந்த மரியாதை என்றே சொல்லலாம். பல பேர் சிவாஜி முன்னாடி நின்று பேசவே பயப்படுவார்கள்.

sivaji1

அது அவர் மீதிருக்கும் ஒரு மரியாதையினால் தான். ஆனால் சிவாஜியே தன்னுடன் நடித்த சக நடிகர்கள் இரண்டு பேரை பார்த்து பயந்திருக்கிறார் என்ற தகவல் தற்போது வைரலாகி வருகின்றது. அதாவது தன்னுடைய சினிமா கெரியரிலேயே ஒரு இரண்டு நடிகர்களை மட்டும் பார்த்து பயந்தாராம் சிவாஜி.

அட இவங்களா?

அதில் ஒன்று நடிகையர் திலகம் சாவித்ரி. இருவரும் சேர்ந்து பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கின்றனர். அதிலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட படம் ‘ பாசமலர்’ . இந்தப் படத்தில் உனக்கு நான் சளைச்சவள் இல்லை என்று சாவித்ரியும் நானும் சளைச்சவன் இல்லை என்று சிவாஜியும் ஒருவருக்கொருவர் தங்கள் பாசத்தை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தினர்.

sivaji savithiri

அதனால் தான் சாவித்ரி தன்னுடன் நடிக்கும் போது சிவாஜி மிகவும் கவனமாக இருப்பாராம். ஏதாவது ஒரு விதத்தில்
தன்னை ஓவர் டேக் செய்து விடுவார் என்று மிகவும் விழிப்புடன் இருப்பாராம் சிவாஜி. அதற்கு தக்க சான்றாக அமைந்த படம் ‘ நவராத்ரி’ திரைப்படம். இந்தப் படம் சிவாஜி சாவித்ரி இருவருக்கும் மிக முக்கியமாக அமைந்த படம். இருவரின் நடிப்பும் பலராலும் பேசப்பட்டது.

எல்லாருக்கும் பயம் தான்

அதே போல் மற்றொரு நடிகர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. இவருடன் நடிக்கும் போதும் சிவாஜி ரொம்பவும் கவனமாக இருப்பாராம். அதே போல் சிவாஜி மிகவும் சீரியஸாக நடித்துக் கொண்டிருக்கும் போது சாதாரண வசனத்தை தன்னுடைய பாணியில் சொல்லிவிட்டு சென்று விடுவாராம். ஆனால் அந்த சாதாரண விஷயம் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்குமாம். ஆகவே தான் எம்.ஆர்.ராதா என்றால் பார்த்து பக்குவமாக தான் சிவாஜி நடிப்பாராம். இந்த செய்தி தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க : மனுஷன் புடிச்சாலும் புலியங்கொம்பா பிடிச்சிருக்காரே!.. ஹன்சிகா,த்ரிஷாவை தொடர்ந்து அரண்மனை 4ல் களமிறங்கும் பளபள நடிகை..

sivaji mr radha

Published by
Rohini